Skip to main content

இலங்கை தமிழர்களுக்குரிய நாடு

இலங்கை தமிழர்களுக்குரிய நாடு எனும் வரலாறு மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது-கொழும்பு கம்பன் விழாவில் முதல்வர் சரவணபவன்
on 2/03/2020 06:10:00 PM


முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரிய நாடு. இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயற்கரும், நாகரும். எமது வரலாற்று சின்னங்களை ஏனையவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவின் நிகழ்வுகள் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இவ்விழவின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று (03.02.2020) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இங்கு தலைமையினை ஏற்று உரையாற்றிய போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்.

தமிழ் மன்னர்களான மூத்தசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள் . இராஜராஜ சோழனும், பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள். இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர்நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

அப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சி செய்த, ஒரு சிவபக்தனான இராவணனால் தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இராவணன் கோட்டை, இராவணன் குன்று, சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான குன்று இராவணின் கோட்டையாக இருந்ததுள்ளது. இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம்.

ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே. அதுமட்டுமல்ல தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து விட்டு ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தும் விட்டார்கள்.

இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஆதாரங்கள் அழிக்கபட்டுவிட்டன.

எமது வரலாற்று சின்னங்களை ஏனையவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம் இராவணன் சிங்கள இனத்தவன் என்று சிங்களவர் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனவே எங்களது உண்மையான வரலாற்றையும், எமது இலக்கியங்களையும் நாம் ஆவணமாக்க வேண்டும்.

அதிலும் இன்றைய நவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் எங்களது வீர வரலாறுகளையும், இலக்கியவான்களின் அதி உச்ச படைப்புகளையும் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றினைய வேண்டும். இது எமது பூர்வீகம் தொடர்பான பல சந்தேகங்களுக்கு பதிலாய் அமைவதோடு சர்வதேச ரீதியாக இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை விடயங்களிலும் சாதகத்தினை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s  Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of the   London based Global Peace Institute (GPI)   which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI  Founder President Nawaz Rajabdeen’s  contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI  Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to  promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” sa

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் ! சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை !! நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் !!! ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் !!!! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ