Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

மண்ணைக்காத்த மயிந்தர்கள் எனக்கூற நாகூசவில்லையா?


"அல்லாஹ்வின் திருநாமத்தால்"

அன்புடையீர்! "அஸ்ஸலாமு அலைக்கும்"

கல்முனைத் தொகுதி என்பது......
+++++++++++++++++++

ஒரு தொகுதியும், ஒரு மாநகரசபையும் ஒரே எல்லையை உள்ளடக்கியதுதான் கல்முனைத் தொகுதியாகும். கேற் முதலியார் காரியப்பர் முதல் கல்முனைத் தொகுதியின் பிரதிநிதித்துவமும், கௌரவமும் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது.

1. எம்.எஸ்.காரியப்பரது காலம். அது கல்முனை விழித்துக்கொண்ட, அபிவிருத்தி கண்ட காலம்.

2. எம்.சி. அஹமது அவர்களுடையகாலம். இது அரசியல் அதிகாரம் செலுத்திய காலம்.

3. ஏ.ஆர்.மன்சூர் அவர்களுடைய காலம். கல்முனை சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டகாலம்.

4. அஷ்ரப் அவர்களது காலம் சமுகத்துக்கு பேரும் புகழும் கிடைத்த காலம்.

5. தற்போதை 18 வருட காலம் இருண்ட காலம்.

6. 1989 முதல் இன்றுவரை பாராளுமன்றம், மாகாணசபை, மாநகரசபை சகலதிலும் அதிகாரம் செலுத்துவது SLMC தான்.

எம்.எஸ்.காரியப்பர் முதல் ஆழுமை உள்ளவர்களால் பாதுகாக்கப்பட்ட கல்முனையின் பிரதிநிதித்துவம் 2004ல் இளக்கப்பட்டது. அதற்கு காரணம் யார்? மக்களா? ஹரீசா?

பேரியல், அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து தேர்தல் கேட்டுவிட்டு ஜனுதீனின் கயிற்றை விழுங்கி மாவடிப்பள்ளி மில் வளவில் இத்தா இருந்துவிட்டு கல்முனையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த வரலாற்று துரோகத்தை செய்தது ஹரீஸ் இல்லாமல் வேறுயார். இதற்கு முகநூல் கூலிகளே உங்கள் பதில் என்ன?

அப்போது ஹகீம் திகாமடுல மாவட்டாத்தில் போட்டியிட்டு கெபினட் அமைச்சராகிறார்.

ஹரீஸ் 2004ல் எம்.பி.இல்லாமலானபோது கலமுனையை பிடித்த சாபம் முடிந்து விட்டதாக உணர்ந்தோம். மீண்டும் SLMCயில் இணைந்து முதல் மேயர் அஜ்மீரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு கல்முனை மாநகரின் மேயரானார் ஹரீஸ். அவரது காலத்தில்தான் சுனாமி வந்தது. கல்முனையை அபிவிருத்திசெய்ய அதைவிட வரப்பிரசாதமான காலம் ஏதுமுண்டா? அதையும் அவரது காலத்தில் பாளடித்து விட்டார்.

கல்முனையின் ஒரு அங்குல நிலத்தையும் இழக்க விடாமாட்டேன் என்று மேடைகளில் நின்று மார்தட்டும் அன்றைய மேயர் ஹரீசும், அன்றைய அம்பாரை மாவாட்ட எம்.பி.ஹகீமும் நமது கல்முனை மாநகர மண்ணை பாதுகாத்தார்களா? உங்கள் நெஞ்சங்களில் கைவைத்து சொல்லுங்கள்.

!987 முதல் 2001 வரை கல்முனை மாநகரின் தெற்கு எல்லையாக இருந்து வருவது -

மாளிகைகாடு சந்தியிலிருந்து தெற்கு நோக்கி காரைதீவு சந்தியை அடைந்து, மேற்காக மாளிகைகாடுவரை சென்று வெட்டை ஆற்றை அடைந்து வடக்கு நோக்கி கிட்டக்கியை போய் சேரும் வர்த்தக, வயல் பரப்பை கொண்ட பகுதியாகும். இப்பகுதியை நமது முன்னோர்கள் கட்டிக்காத்து தந்தார்கள்.

கல்முனை நகரசபை 1067/16 ம் இலக்க 1998.12.01ம் திகதிய கெசட் மூலமும், கல்முனை மாநகரம் 1188/16ம் இலக்க 2001.06.01ம் திகதிய கெசட் மூலமும் ஒரே எல்லைகளை கொண்டதாகவே கெசட் செய்யப்பட்டு நமது காணியின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டன.

கல்முனையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை 2004 ல் வரலாற்றில் இல்லாமல் செய்த ஹரீஸ்  கல்முனை மாநகர மேயராக 2005ல் இருந்தபோது, 2005.12.01ல் நிந்தவூர் பிரதேச சபையிலிருந்து மாளிகைகாடு, மாவடிப்பள்ளி ஆகிய 40% முஸ்லிம்களை உள்வாங்கி காரைதீவு பிரதேசசபை உருவானது.

ஒரு பிரதேச சபை புதிதாக உருவாகும்போது அதற்கும், அதன் பக்கத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கும் வெவ்வேறாக எல்லைகள் கெசட் செய்யப்பட வேண்டு.

அதற்கமைய காரைதீவு பிரதேச சபை உருவானபோது 2005.12.01ல் நிந்தவூர் பிரதேச சபை புதிதாக காரைதீவு நீங்கலாக கெசெட் செய்யப்பட்டது. அதேபோல மேற்கு, வடபுற எல்லையை காரைதீவை தவிர்த்து கல்முனை மாநகர சபைக்கும் புதிதாக கெசட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அது செய்யப்பட இல்லை.

காரைதீவு பிரதேச சபை உருவாகி கெசட் செய்யப்பட்டபோது, தெற்கிலுள்ள நிந்தவூர் பிரதேச சபைக்கு கெசட் செய்யப்பட்டது ஆனால் வடக்கிலுள்ள கல்முனை மாநகர சபைக்கு ஏன் கெசட் செய்யப்படவில்லை.

* 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் உருவாக்கம் பற்றிய சட்டத்தின் பாகம் 1 பந்தி 2(1) ன் பகுதியில் " ஒரு பிரதேச சபை புதிதாக உருவாகும்போது அது நகரசபை, மாநகரசபை ஆகியவற்றின் இடப்பரப்பு நீங்கலாக" அமைதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு 1987 ஏப்ரல் 16ல் கெசட் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற சட்டத்தின்படி கல்முனை மாநகருக்கு சொந்தமான தென்பகுதி காணிகளும், வர்த்தக நிலையங்களும்,பள்ளிவாசல் வளவும் காரை தீவு பிரதேச சபை உருவானபோது களவாடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு முள்ளது.

அதாவது மாளிகைகாடு சந்தியிலிருந்து மேற்கு நோக்கி பரடைஸ் ஹோட்டலை ஊடறுத்து வெட்டை ஆறுவரை சென்று கல்முனை மாநகரின் தென்புறமாக உள்ள பெரும் நிலப்பரப்பு காரை தீவால் காவுகொள்ளப்பட்டுள்ளது. காரை தீவால் காவுகொள்ளப்பட்ட படம் கீழே  பிரசுரமாக உள்ளது. இது நடந்தது 2005ல் ஹரீஸ் மேயராகவும், துரோகி ஹகீம் அம்பாரை மாவட்ட எம்.பி.யாகவும், கெபினட் அமைச்சராகவும் இருக்கும் போதுதான் நடந்தது. இவர்கள்தான் கல்முனை மாநகரின் பாதுகாவலர்கள். தூ... அவர்களுக்குத்தான் வெட்கமில்ல என்றால் முகநூலில் வரலாறு தெரியாது எழுதும் நுனிப்புல் மேயும் கூலிகளுக்கு வெட்கமில்லயா?

எங்களது பள்ளிவாசல்.எங்களது இருப்பு எல்லாம் காரைதீவு தமிழர்களால் திட்டமிட்டு சூறையாடப்பட்டு, அவர்களது பிரதேச செயலகட்டிடத்தை நமது கல்முனை மாநகர எல்லைக்குள் நமது அபு அப்துல்லாஹ் பள்ளி வளவுக்குள் சட்டாவிரோதமாக கட்ட பார்த்திருந்தது யார்? கையாலாகாத ஹரீசும், ஹகீமும் அவர்களது கூசாத்தூக்கிகளும்தான் துரோகிகள்.

இவர்களை பார்த்து சமுகபாதுகாவலர்கள், மண்ணைக்காத்த மயிந்தர்கள் எனக்கூற நாகூசவில்லையா? மண்ணாங்கட்டிகள்.

1989 முதல் இன்றுவரை கல்முனை தொகுதி பா.உ., மாகாணசபை உறுப்பினர், மாநகர சபை சகலதும் SLMC யிடம் தான் இருந்தது, இருக்கிறது என்னத்த கிளிச்சுள்ளார்கள்.

2004ல் சுணாமி வந்தது சாய்ந்தமருது பிரதேச செயலக பகுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாய்ந்தமருதின் வொலிவோரியன் வீட்டுத்திட்டம் நியாயமான தீர்வு.

மாளிகைகாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் காரைதீவு பிரதேச செயலக பகுதியில் வாழ்ந்வதார்கள். அவர்களுக்கான வீடுகளை சாய்ந்தமருது பள்ளி நிர்வாகம், SLMC பா.உ.கள், சாய்ந்தமருது DS ஆகியோர் வக்புசபையின் அனுமதியுடன் ஒரு கெபினட் பேபரை ஹகீம்மூலம் போட்டு அந்த அபு அப்துல்லா பள்ளி இருந்த நமது உறுதிப்பூமியில் சுனாமி வீடுகளை கட்டி கொடுத்திருக்கலாம்.

கல்முனையில் இருந்து பிரிந்து பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு இருந்த கோமணத்தை காரைதீவானிடம் பறிகொடுத்துவிட்டு ஊருக்கு எம்.பி.எண்டு தொகுதிக்கு எம்.பி.யை இல்லாமலாக்க சதி நடக்கின்றது.

"இன்ஸா அல்லாஹ்"  கல்முனை மாநகரின் எல்லைகளை மீட்க, காரைதீவின் சட்டவிரோத கெசட்டை வறிதாக்க பிரதேச வாதத்துக்கப்பால் நாம் சுஜூது செய்த அபு அப்துல்லா பள்ளியின் மண்ணை பாதுகாக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்காட தீர்மானித்துள்ளேன்.

இதற்கான உதவி ஒத்தாசைகளை பிரதேச வேறுபாடின்று நல்ல உள்ளம் களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

வெற்றி அல்லது வீரசுவார்க்கம்.

குறிப்பு: நடுநிலையாக நின்று சிந்திக்கும் சமுக உணர்வுள்ள புத்திசாலிகளுக்கே எனது பதிவு புரியும்.

ஹாஜி நஸீர்

Note. க‌ல்முனை த‌லைமையிலான‌ தேசிய‌ க‌ட்சியொன்றை ப‌ல‌ப்ப‌டுத்த‌ நாம் த‌வ‌றிய‌தும் ந‌ம‌து இழ‌ப்புக்க‌ளுக்கு பெரும் கார‌ண‌மாகும். ஹ‌க்கீம் போன்ற‌ வ‌ந்தான் வ‌ர‌த்தானையெல்லாம் ந‌ம்பி மோச‌ம் போனோம். முஸ்லிம் காங்கிர‌சை க‌ல்முனையில் இருந்து ஒழிக்காத‌வ‌ரை க‌ல்முனை முஸ்லிம்க‌ள் இழ‌ப்புக்க‌ளை ம‌ட்டுமே தொட‌ர்ந்தும் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்