Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

இலங்கையர்கள் என்ற உணர்வோடு ஐக்கியத்தை வலுப்படுத்துவோம் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள்


( மினுவாங்கொடை நிருபர் )

   அன்று இந்த மண்ணில் வாழ்ந்த எமது முன்னோர்கள் இந்த நாட்டுக்குச் செய்த சேவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவர்கள் இல்லை என்றால் நாம் இந்த மண்ணில் இன்று இல்லை. ஏன்... இந்த நமது  நாடும் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு, "இலங்கையர்கள்" என்ற உணர்வோடு  எமது ஐக்கியத்தை மேலும்  வலுப்படுத்திக் கொள்வோம் என்று, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க.  பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் தொடர்பில் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். 
   அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,     அன்று எமது முன்னோர்கள் இந்த நாட்டுக்குச் செய்த புனித சேவைகள் அனைத்தும், இன்று மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருவதை, மிகவும் கவலையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 
   நாம் எமது  முன்னோர்களின் வரலாற்றைத் தேடிப் படித்து, அதனை எமது எதிர்காலச் சந்ததிகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒரு அவசரத் தேவை மட்டுமல்ல, நம் அனைவர் மீதும்  ஒரு கட்டாயக் கடமையாகும் என்பதையும் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். 
   நாம் எமது தேசப் பற்றை தேசியக் கொடி மற்றும், தேசியக் கீதத்தோடு மாத்திரம்  நிறுத்திக்கொள்ளாமல், எல்லா இன மக்களுடனும்  மனித நேயத்துடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும்.
    சுயநலம் இன்றி சமூக அக்கறை கொண்டவர்களாக நாம் மாறவேண்டும். 
அன்று வாழ்ந்த நமது முன்னோர்கள்,  சுயநலம் உள்ளவர்களாகச்  செயற்பட்டு இருந்தால், 
இன்று இந்த மண்ணில் நாம் நிம்மதியாக வாழ்ந்திருக்க மாட்டோம். இன்று நாம் எமது மார்க்கக் கடமைகளையும்,  வணக்கங்களையும்  நிறைவேற்றுகின்றோம் என்றால்,
அதற்கும் காரணம் அந்த முன்னோர்கள்தான் என்பதைக்  குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
   நாம் இந்த உலகில் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.
பிறந்தோம்,
வாழ்ந்தோம்,
மரணித்தோம் என்று இல்லாமல்,
எமது பிறப்பு, இறைவனுக்கும் நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும்.
   நாம் இந்த உலகில் வாழ வந்தவர்கள் அல்ல. பிறரையும் வாழ வைக்க வந்தவர்கள். இந்தப் பழக்க வழக்கங்கள் நம்மிடையே எப்பொழுதும் எங்கேயும் வேரூன்றி இருக்க வேண்டும். 
நாம் மரணித்தாலும் யாரும் எம்மை மறக்கக் கூடாது.
யாரும் எம்மை  வெறுக்காத அளவுக்கு எமது வாழ்கை மற்றும் செயல்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், 
யாரும் மறக்காத அளவுக்கு எமது மரணம் நிச்சயம்  இருக்கும். 
   எனவே, பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி உதயமாகும் இலங்கையின் 72  ஆவது சுதந்திர தினத்தை வரவேற்குமுகமாக எமது இல்லங்கள், வியாபாரஸ்தலங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் இலங்கையின் தேசியக் கொடியை உயர்த்தி, "நாமும் இந்த மண்ணில் பிறந்தவர்களே" என்று  எமது நாட்டுப்பற்றை  வெளிப்படுத்துவோம். இலங்கை வாழ் அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாய்க் கை கோர்த்து செயற்படுவோம்.
இது  எமது தாய் நாடு. எமது "தாய்" க்கு நாம் என்ன கடமைகளைச் செய்கின்றோமோ, அதைப் போல் எமது தாய் நாட்டுக்கும்  எமது கடமைகளைச் செய்ய முன்வர வேண்டும்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச