குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுழுக்கு நோய் குணமாகின்றது -குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர்


பாறுக் ஷிஹான்

காலையில் தினமும் குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுழுக்கு நோய் குணமாகின்றது என கல்முனைக்குடியில்  குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர்  தெரிவிக்கின்றார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில்  காலையில் தினமும்  தலைக்கவசம் அணிந்து கொண்டு 58 வயதுடைய குறித்த நபர்   குதிரை ஒன்றில் வலம் வருகின்றார்.

அவர் குறித்த குதிரையை மருதமுனைவாசி ஒருவரிடம் இருந்து ரூபா 1 அரை  இலட்சத்திற்கு கொள்முதல் செய்துள்ளதாகவும் சாதாரணமாக புல் கொடுத்து குதிரையை குளிப்பாட்டி பராமரிப்பதாகவும் தினமும் குதிரையின் பராமரிப்பிற்கு ரூபா 500 செலவாகுவதாகவும் தெரிவிக்கின்றார்.

கடந்த காலங்களில் வேளாண்மை செய்கையில் ஈடுபட்ட இம்முதியவர் இடுப்பு சுழுக்கு நோய் காரணமாக அதை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்