உங்கள் ஆட்களை கட்டுப்படுத்தி வையுங்கள் ” – கோட்டாவிடம் சொன்னார் மைத்ரி !
Posted by aljazeeralanka.com on February 22, 2020 in My 3 | Comments : 0
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழு ஆதரவை ஜனாதிபதி சார்ந்த கட்சிக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ள நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம் பிக்கள் செய்துவரும் எதிர்விமர்சனங்கள் தேர்தலில் தாக்கங்களை ஏற்படுத்தலாமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நடத்திய சந்திப்பின்போது இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .நேற்றுமுன்தினமிரவு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
” கடந்த நல்லாட்சியில் ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்ற அதிகாரம் ஒரு கட்சியிலும் இருந்தபடியால் ஜனாதிபதியால் எந்த செயற்பாட்டையும் தற்றுணிவுடன் செய்ய முடியாமல் போயிற்று.அதனால் தான் அப்படி எதுவும் எதிர்காலத்தில் நடக்கக் கூடாதென்பதற்காக தற்போதைய ஜனாதிபதி சார்ந்த கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பெற்றுக் கொடுக்க சுதந்திரக் கட்சி தீர்மானித்தது.ஏற்கனவே இதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன .ஆனால் பொதுபெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் அரசியல் மேடைகளில் எமது கட்சியை – உறுப்பினர்களை – என்னை பகிரங்க விமர்சனம் செய்துவருகின்றனர்.இவ்வாறான செயற்பாடுகள் அரசியலில் எதிர்காலத்தில் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.எனவே அப்படியானவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குங்கள்.நாங்களும் பதில் விமர்சனங்களை செய்தால் அது அரசியல் நாகரீகமாக இருக்காது ”
என்றும் இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி ஜனாதிபதி கோட்டாபயவிடம் எடுத்துக்கூறினார் என்று அறியமுடிந்தது.
இந்த விடயத்தை கட்சியின் உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார் என்று அறியமுடிந்தது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment