பொதுத் தேர்தலில் ரணில் – சஜித் அணிகள் தனிவழிப்பயணம் !எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் ரணில் தலைமையிலான அணியும் அதன் பிரதித் தலைவர் சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணியும் தனித்தனியே போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

யானை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற ரணிலின் விடாப்பிடியும் இதய சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற சஜித்தின் கடும்போக்கும் இந்த நிலைமைக்கு காரணமென தெரிகிறது.

இன்று இருதரப்பினருக்குமிடையில் பேச்சு நடந்தாலும் அதில் பெரிய முன்னேற்றம் ஏற்படாதென தெரிகிறது.

முன்னதாக நேற்று கட்சியின் மாவட்ட முகாமையாளர்களை சந்தித்த ரணில், வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்ய கட்சிச் செயலருக்கு தாம் உத்தரவிட்டுள்ளாரென்றும் ,சஜித் அணி விரும்பினால் தனித்துச் செல்லட்டுமெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம் யானை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளதால் அதிலும் எந்த மாற்றங்களையும் செய்யமுடியாதென ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பின்னணியில் ரணில் – சஜித் அணிகள் தனித்தனியே தேர்தலில் களமிறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்