அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கு நல்லாந்தலுவ ஊர் மக்களால் கௌரவிப்பு.
Posted by
aljazeeralanka.com
on
February 01, 2020
in
|
அகில இலங்கை மக்கள் காங்ரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கு நல்லாந்தலுவ ஊர் மக்களால் கௌரவிப்பு.
அகில இலங்கை மக்கள் காங்ரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளரும், BCMH இன் தலைவருமான அலி சப்ரி ரஹீம் அவர்களால் வழங்கி வைக்கப்படும் 10,000 மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் நிறைவை அடுத்து பலரின் வேண்டு கோளுக்கு இணங்க இன்னும் மேலதிகமாக 2,000 மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் 2ம் கட்ட நிகழ்வின் முதல் கட்ட வைபவம் நேற்று 2020.01.30 ம் திகதி மாலை மதுரங்குளி Dream Hall இல் நடை பெற்றது.
இந் நிகழ்வின் போது நல்லாந்தலுவ ஊர்மக்களால் கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் சேவைகளை பாராட்டி சேவைநலன் பாராட்டு விழா நடாத்தி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
இச்சேவைநலன் பாராட்டு விழாவில் குவைத் வாழ் கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பலய மாணவர் சங்கத்தால் நினைவுச்சின்னமும், அது போன்று நல்லந்தலுவை கிராம அபிவிருத்தி சங்கத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தள மாவட்ட செயலாளர் ஜவ்சி, BCMH நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரிஸ்வான், கல்வி ஆலோசகர் மற்றும் BCMH இன் ஊடக இணைப்பாளருமான சில்மியா யூசுப் , கவிக்குரல் மன்சூர்,பாவா ஹாஜியார் ஆசிரியர் பௌஸுல், சட்டத்தரணி நுஹ்மான், நல்லாந்தழுவ சமூக சேவையாளர் சம்சுதீன்,வேப்பமடு ACMC உபதலைவர் ரிஸ்வாத், சதாமியா புரம் செயலாளர் அப்துல் மஜீத் உட்பட ஏராளமான சிறப்பு அதிதிகள் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் உலமாக்கள் ஊர் நலன் விரும்பிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment