இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு AUMSA வினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை வேலைத்திட்டம் கொழும்பு அல் ஹிதாயா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை நினைவுகூறும் முகமாக அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியம்-AUMSA வினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஓர் முக்கிய நிகழ்வான "Spade To Shade" - பசுமையான எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம், தொடர்ந்தும் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இம்முறையும் வெற்றிகரமாக கொழும்பு அல் ஹிதாயா வித்தியாலயத்தில், பெப்ரவரி 4, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும், நாடளாவிய ரீதியில் Spade To Shade நிகழ்விற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன், நம்முடன் இப்பயணத்தில் இணைந்து ஒத்துழைப்புகளை வழங்கிய சகலருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை  இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் என அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் அஹ்மத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்