Posts

Showing posts from February, 2020

முடிவின்றி முடிந்தது ஐ தே க செயற்குழுக் கூட்டம் !

Image
BREAKING NEWS முடிவின்றி முடிந்தது ஐ தே க செயற்குழுக் கூட்டம் ! ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று மாலை கூடிய போதும் தேர்தல் சின்னம் தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. மீண்டும் வரும் ஞாயிறு செயற்குழு கூடவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் தெரிவித்துள்ளார். கூட்டம் நடக்க முன்னர் ரணிலும் சஜித்தும் மூடிய அறைக்குள் தனியே நீண்ட நேரம் பேச்சு நடத்தினர். அதன் பின்னரே இந்த சந்திப்பு நடந்தது.

‘மக்கள் காங்கிரஸை தனித்து போட்டியிடுமாறு சஜித் கூறியதாக குருட்டு ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன’ - புத்தளத்தில் ரிஷாட்!!!

Image
‘மக்கள் காங்கிரஸை தனித்து போட்டியிடுமாறு சஜித் கூறியதாக குருட்டு ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன’  -  புத்தளத்தில் ரிஷாட்!!! ஊடகப்பிரிவு - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாம் அமைத்துள்ள கூட்டமைப்பில் போட்டியிடாமல் தனித்துப் போட்டியிடுமாறு, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக சில குருட்டு ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பரப்பி வருவதாகவும், இது அப்பட்டமான பொய்யாகும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்தார். இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் அகதிமக்கள் மத்தியில், இன்று மாலை (22) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “சஜித் பிரேமதாச என்னைச் சந்தித்தபோது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனித்து போட்டியிட வேண்டாமெனவும் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுமாறும் கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த நான், எமது கட்சி சில மாவட்டங்களில் உங்கள் தலைமையிலான கூட்டமைப்பிலும், சில மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடும் எனத் தெரிவித்தேன். சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு நாங்கள் ச

கல்முனை உள்ளூராட்சி நிருவாகம்"நூல் வெளியீடு.

Image
(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய 250 வருட வரலாற்றுப் பதிவுகள் கொண்ட "கல்முனை உள்ளூராட்சி நிருவாகம்" நூல் வெளியீடு இன்று  ( 2020.02.22 )சனிக்கிழமை பிற்பகல் கல்முனை மஹ்ஃமூத் மகளீர் கல்லூரி, சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் பட்டின சபை தலைவர் ஏ.எம். முகைதீன் பாவா முன்னிலையில், மரபுரிமை ஆய்வு வட்டம் ஏற்பாட்டில் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வெளிநாட்டுச் சேவை, சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ. அஸீஸ் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் முன்னாள் செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள்கல்முனை மாநகர சபை பொறியியலாளர் டி.சர்வானந்தா மற்றும் கலை இலக்கியவாதிகள் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மரபுரிமை ஆய்வு வட்டத்தின் ஆலோசகரும் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முபீஷால் அபூபக்கர் நூல் பற்றிய உரையும், நூலாசிரியரினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது. மேலும் கிழக்கு மாகாண கலாச்சார அலுவல்கள

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது ஏ.சி யஹியாகான் தேசிய பிரதி பொருளாளராகb தெரிவு செய்யபட்டனர்.

Image
ஸ்ரீலங்கா   முஸ்லிம்   காங்கிரஸின்   இவ்வருடத்திற்கான   கட்டாய   உயர்பீடத்திற்கான   கூட்டத்தின்   தீர்மானத்திற்கமைய   புதிய   வருடத்திற்கான   மிக   முக்கியமான   உயர்பீட   பதவிகளில்   ஒன்றாகிய   தேசிய   பிரதி   பொருளாளர்   பதவிக்கு   உயர்பீட   உறுப்பினரும்   அம்பாறை   மாவட்ட   பொருளாளரும்   சாய்ந்தமருதில்   முக்கிய   அரசியல்   பிரமுகர்த்தாவுமாகிய   ஏ . சி . எஹியாகான்   சேர்   அவர்கள்   கட்டாய   உயர்பீடத்தினால்   நேற்று   தெரிவு   செய்யப்பட்டுள்ளார்   அதை   ஸ்ரீலங்கா   முஸ்லிம்   காங்கிரஸ்   கட்சியின்   தேசிய   தலைவர்   அல்ஹாஜ்   ரவூப்   ஹக்கீம்   சேர்   அவர்கள்   பேராளர்   மாநாட்டில்   அறிவித்திருக்கிறார்   ஏ . சி . எஹியாகான்   சேர்   அவர்கள்   கடந்த   இரண்டு   மூன்று   தேர்தல்களில்   கட்சிக்காக   தனது   உயிரைக்   கூட   துச்சமென   மதித்து   கட்சியின்   வளர்ச்சிக்காக   அரும்பாடு   பட்டு   கட்சியை   கொண்டு   சென்று   ஒரு   முக்கிய   இடம்   பிடித்தவர்   என்ற   அடிப்படையில் ஸ்ரீ   லங்கா   முஸ்லிம்   காங்கிரஸ்   உயர்பீடம்   அவரை   சாய்ந்தமருது   மண்ணிலே   அவரை   கௌரவித்துள்ளது  

குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுழுக்கு நோய் குணமாகின்றது -குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர்

Image
பாறுக் ஷிஹான் காலையில் தினமும் குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுழுக்கு நோய் குணமாகின்றது என கல்முனைக்குடியில்  குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர்  தெரிவிக்கின்றார். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில்  காலையில் தினமும்  தலைக்கவசம் அணிந்து கொண்டு 58 வயதுடைய குறித்த நபர்   குதிரை ஒன்றில் வலம் வருகின்றார். அவர் குறித்த குதிரையை மருதமுனைவாசி ஒருவரிடம் இருந்து ரூபா 1 அரை  இலட்சத்திற்கு கொள்முதல் செய்துள்ளதாகவும் சாதாரணமாக புல் கொடுத்து குதிரையை குளிப்பாட்டி பராமரிப்பதாகவும் தினமும் குதிரையின் பராமரிப்பிற்கு ரூபா 500 செலவாகுவதாகவும் தெரிவிக்கின்றார். கடந்த காலங்களில் வேளாண்மை செய்கையில் ஈடுபட்ட இம்முதியவர் இடுப்பு சுழுக்கு நோய் காரணமாக அதை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரசின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர்

Image
#29வது பேராளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாகத் தக்பீர் முழக்கத்துடன் தெரிவு செய்யபட்டனர். (சர்ஜுன் லாபீர்) தலைவர்-ரவூப் ஹக்கீம் தவிசாளர்-ஏ.எல். அப்துல் மஜிட் சிரேஸ்ட பிரதி தலைவர்-எம்.எஸ்.எம்.அஸ்லம் பிரதி தலைவர் 01-ஹாபீஸ் நஸீர் அகமட் பிரதி தலைவர் 02-யூ.டி.எம்.அன்வர் பிரதி தலைவர் 03-எச்.எம்.எம்.ஹரிஸ் பிரதி தலைவர் 04-எஸ்.எம்.ஏ.கபூர் கட்சியின் செயலாளர்-எம்.நிசாம் காரியப்பர் கட்சியின் பொருளாளர்-பைசால் காசீம் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர்-எம்.ஐ.எம்.மன்சூர் மஜ்லிஸ் சூரா தலைவர் மௌலவி- ஏ.எல்.எம்.கலீல் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்-யு.எல்.எம்.முபீன் கட்சியின் தேசிய அமைப்பாளர்-சபீக் ரஜாப்தீன் கட்சியின் அரசியல் விவகார பணிப்பாளர் -சட்டத்தரணி எம்.பி பாறூக் கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளர்-சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ் கட்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர்-எம்.எஸ்.தெளபீக் உலமா காங்கிரஸ் தலைவர் மெளலவி எச்.எம் எம் இல்லியாஸ் கட்சியின் பிரதி தவிசாளர்-என்.எம்.நயிமுல்லாஹ் கட்சியின்

உங்கள் ஆட்களை கட்டுப்படுத்தி வையுங்கள் ” – கோட்டாவிடம் சொன்னார் மைத்ரி !

Image
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழு ஆதரவை ஜனாதிபதி சார்ந்த கட்சிக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ள நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம் பிக்கள் செய்துவரும் எதிர்விமர்சனங்கள் தேர்தலில் தாக்கங்களை ஏற்படுத்தலாமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நடத்திய சந்திப்பின்போது இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .நேற்றுமுன்தினமிரவு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ” கடந்த நல்லாட்சியில் ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்ற அதிகாரம் ஒரு கட்சியிலும் இருந்தபடியால் ஜனாதிபதியால் எந்த செயற்பாட்டையும் தற்றுணிவுடன் செய்ய முடியாமல் போயிற்று.அதனால் தான் அப்படி எதுவும் எதிர்காலத்தில் நடக்கக் கூடாதென்பதற்காக தற்போதைய ஜனாதிபதி சார்ந்த கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பெற்றுக் கொடுக்க சுதந்திரக் கட்சி தீர்மானித்தது.ஏற்கனவே இதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன .ஆனால் பொதுபெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் அரசியல் மேடைகளில் எமது கட்சியை – உறுப்பின

தேசிய பாதுகாப்புத்துறைசார் மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்க!

Image
கிழக்கு முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட் காட்டம் மர்க்க சம்பந்தமான விடயங்களில் பள்ளிவாசல்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு வழிமுறைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறானதொரு நெருக்கு வாரத்தை தருவதற்கான ஏற்பாடாகவே தேசிய பாதுகாப்புத்துறைசார் மேற்பார்வை குழவின் பரிந்துரை முன்வைக்கப்பட்டு அது கடந்த 19ஆம்திகதியன்று பாராளுமன் றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கான குழுவில் இடம் பெற்றிருந்த முஸ்லிம் தரப்பினரின் ஆளுமைகுறித்து நான் வெட்கப்படுகின்றேன். இதனை மீளாய்வு செய்யவேண்டியது அவசியமானது. இவ்வாறு காரசாரமாகத் தெரிவித்திருக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதல் வரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட். இதுவிடயமாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:- மேற்குறித்த பரிந்துரைகள் அனைத்தும் முஸ்லிம் இனத்தை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட பரிந்துரையாகவே பார்க்க முடிகின்றது. குறிப்பாக “வக்பு சட்டத்தை திருத்தி பள்ளிவாசல்களில் நடைபெறும் அனைத்து பிரசங்கங்களையும் ஒலிப்பதிவு செய்யவேண்டும், முஸ்லிம் இனத்தின் விகிதாசாரத்துக்கு அமைவாக பள்ளிவாசல்க ளின் எண்ணிக்கையை தீ

முஸ்லிம் பெண்களின் புர்கா தொடர்பில் பைஸர் முஸ்தபா தரும் கருத்து

Image
முஸ்லிம் பெண்களின் புர்கா தொடர்பில், சில பேஷ் புக் நிறுவனங்கள் என்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப்பிரசாரங்களை முற்று முழுதாக தான்  நிராகரிப்பதாகவும், இது என்மீது வேண்டுமென்றே சுமத்தப்படும் பழி என்பதால், இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்றும், முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (பா.உ.) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     தனியார் தொலைக்காட்சி  நிறுவனமொன்றில் (17) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, பைஸர் முஸ்தபா இவ்வாறு கேட்டுள்ளார்.     அவர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,     சில வெப் தளங்கள், எனது கலந்துரையாடலில் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து, அதனைத் திரிவுபடுத்தி, பேஷ்புக் மூலமாக பொய்ப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.    என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. நான் அங்கு கூறாத ஒன்றைத் திரிவுபடுத்தி அவற்றை வைரலாக்கி வருகின்றன. என்மீது சேறு பூசும் விதத்திலேயே இவ்வாறான பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக நான் அறிகிறேன்.   இவ்வாறான பொய்ப் பிரசா

சாய்ந்தமருதுக்கு எல்லை போட்ட அதாவுல்லவின் அவாசரபுத்தி

Image
கதிர் புறக்க வந்தவர் உப்பட்டியை திருடிவிட்டார். +++++++++++++++++++ தனது வங்குரோத்து அரசியலின் ஓட்டை வாக்குச் சாக்கை நிறைக்க அதாவுல்லா நேர்மை, நியாயம், வாக்குறுதி என்பவைகளை மீறி வெறுங்கையால் முளம் அளக்க புறப்பட்டுள்ளார். 1987 பிரதேச சபை காலம் முதல் 1989 நகரசபை, 2001 மாநகர சபை என கல்முனையின் உள்ளூராட்சி நிர்வாகம் பல பெயர்களில் நிர்வாகிக்கப்பட்டாலும், அதன் தென்புற எல்லை " மாளிகைகாட்டு சந்தியிலிருந்து, காரைதீவு சந்திவரை சென்று சம்மாந்துறை வீதியால் மேற்கு நோக்கி மாவாடிப்பள்ளியை அடைந்து வெட்டை ஆற்றுடன் முடிவடைந்து அங்கிருந்து வடக்கு நோக்கி கிட்டங்கியில் முடிவடைகிறது. 2005ம் ஆண்டு காரைதீவு பிரதேச சபை உருவானபோது 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபை உருவாக்கம் பற்றிய பாராளுமன்ற சட்டத்தை மீறி மாளிகைக்காட்டு சந்தியிலிருந்து பழைய பரடைஸ் ஹொட்டலை ஊடறுத்து வயல்களுக்கு ஊடாக வெட்டைஆற்றை சென்றடைகிறது. இதன் மூலம் குடாகரை கிழக்கு, குடாகரை மேற்கு என சுமார் 600 ஏக்கர் வயல் நிலங்களும், ஏனைய நிலபுலங்களும், அபு அப்துல்லா பள்ளியும்,ஸியாறமும் காரைதீவால் சட்டவிரோதமாக காவுகொள்ளப்பட்டுள்ளது. இது நட

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

Image
சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச

அம்பாரையில் மீண்டும் ஆசனத்தை இழக்கும் மக்கள் காங்கிரஸ்

Image
அம்பாரையில் மீண்டும் ஆசனத்தை இழக்கும் மக்கள் காங்கிரஸ் ஏ.எல்.றமீஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த ஐந்து வருடங்களாக அம்பாரை மாவட்டத்தில் ஆச்சிரியத்தக்க வகையில் பெரும் அசுர வளர்ச்சியை ஏட்டியிருந்த நிலையில் அக்கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வியூகத்தில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக அதே வேகத்தில் பூச்சியத்தை நோக்கி மீண்டும் திரும்பிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. சாதாரண மக்களின் உழைப்பிலும் வியர்வையில் தொடங்கப்படுகின்ற ஒரு இயக்கம் நிலைத்து நிற்கக் கூடிய தன்மையைக் கொண்டிருக்கும் என்ற உண்மைக்கு எதிரான நிலைப்பாட்டை தகர்த்து பிரமுகர்களைக் கொண்டு பலமான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வெளியேற்றத்தால் கட்சி சுக்கு நுர்றாக துண்டாடப்படுகின்றது. 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 33 ஆயிரம் வாக்குகளை பெற்ற போதும் மக்கள் காங்கிரஸால் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாமல் போய்விட்டது. அம்பாரை மாவட்டத்தின் 33 ஆயிரம் முஸ்லிம் மக்களின்  வாக்குகள் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது.

பொதுத் தேர்தலில் ரணில் – சஜித் அணிகள் தனிவழிப்பயணம் !

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் ரணில் தலைமையிலான அணியும் அதன் பிரதித் தலைவர் சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணியும் தனித்தனியே போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. யானை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற ரணிலின் விடாப்பிடியும் இதய சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற சஜித்தின் கடும்போக்கும் இந்த நிலைமைக்கு காரணமென தெரிகிறது. இன்று இருதரப்பினருக்குமிடையில் பேச்சு நடந்தாலும் அதில் பெரிய முன்னேற்றம் ஏற்படாதென தெரிகிறது. முன்னதாக நேற்று கட்சியின் மாவட்ட முகாமையாளர்களை சந்தித்த ரணில், வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்ய கட்சிச் செயலருக்கு தாம் உத்தரவிட்டுள்ளாரென்றும் ,சஜித் அணி விரும்பினால் தனித்துச் செல்லட்டுமெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம் யானை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளதால் அதிலும் எந்த மாற்றங்களையும் செய்யமுடியாதென ரணில் குறிப்பிட்டுள்ளார். இந்த பின்னணியில் ரணில் – சஜித் அணிகள் தனித்தனியே தேர்தலில் களமிறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற கதிரை என்பது ஒரு சங்கீதக் கதிரையல்ல

Image
இன்று ஏ.சி.எஹியாகான் சேர் அவர்களின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கூறியது ☟☟☟☟ பாராளுமன்ற கதிரை என்பது ஒரு சங்கீதக் கதிரையல்ல எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலே விசேடமாக கல்முனை தொகுதியிலே வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர் மிகவும் கூடுதலான பணியை முஸ்லிம் சமூகத்தின் நகரமாக கருதப்படும் கல்முனையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியவராக இருக்க வேண்டும் அதனால் தான் நாங்கள் கூறுவது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சம்மாந்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை போலல்ல   பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை போலல்ல கல்முனையில் இருக்கின்றவருக்கு மிகவும் கூடுதலான பனி இருந்தன அவர் அதற்கு கஷ்டப்பட்டு இருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிந்த விடயம் ஆகையினால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட ஒரு இடத்தை ஒரு ஊரை மையமாக கொண்டு நடக்கின்ற பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய கூடாது. வர இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கல்முனை தொகுதியில் மிகவும் கூடுதலான பணியை செய்ய வேண்டி இருக்கின்றது ஏனென்றால் அலி சப்ரி என்கின்ற சிரேஷ்ட சட்டத்தரணி அவர்களும் வந்து சொல்லி சென்

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர்

Image
பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார். கல்முனை மாநகர சபையின்  முதல்வர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப்  தலைமையில்  புதன்கிழமை (12 ) 10 மணியளவில்  இடம்பெற்ற விசேட அமர்வின்போதே இவர் தெரிவு செய்யப்பட்டார். குறித்த புதிய பிரதி மேயர் தெரிவில் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர் அமீர் வழிமொழிந்ததுடன் அதே கட்சியை சேர்ந்த ஏ.எம் றோசன் அக்தர் வழிமொழிந்த நிலையில் சபையில் சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதி முதல்வராக தெரிவானார். முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் (தமிழர் விடுதலை கூட்டணி ) கட்சி தலைவரினால் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதனை தொடர்ந்து எழுந்த வெற்றிடத்திற்கு புதிய  பிரதி முதல்வராக ரஹ்மத் மன்சூர் தெரிவு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று(12) நடைபெற்ற  மாநகரபையில்   நடைபெற்ற இவ்விசேடகூட்டத்தில் மாநகர சபையின் 41 உறுப்பினர்களில் 15 பேரே சமுகமளித்திருந்ததுடன் சபை நடாத்த முதல்வருடன் சேர்த்து 15 பேர் இப்பிரதி ம

சின்னத்தை மாற்ற கால அவகாசம் இல்லாததால் ஐ.தே.க. கூட்டணி யானை சின்னத்திலேயே களமிறங்கும்

Image
( மினுவாங்கொடை நிருபர் )    ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி யானைச் சின்னத்திலேயே அனைத்துப் பங்காளிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேர்தலில் களமிறங்கும் என அஜித் மானப்பெரும எம்.பி. தெரிவித்துள்ளார்.    கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த யோசனையை 80 வீதத்துக்கு அதிகமானோர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதற்கிணங்க தொடர்ச்சியாக மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள யானைச் சின்னத்திலேயே தேர்தலில் இறங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    புதிய கூட்டணி "இதயம்"  சின்னத்தில் தேர்தலில் இறங்குவதற்கு ஒரு சிலரால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அதற்கான கால அவகாசமோ மக்கள் அங்கீகாரமோ இல்லாத நிலையில், தேர்தலுக்கான காலமும் இன்னும் சில வாரங்களே உள்ளதாலும், யானைச் சின்னத்திலேயே தேர்தலில் இறங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.    ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் நேற்று முன் தினம் (11)  நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.     இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும்போது,      ஐக்கிய தேசியக் கட்சியில் சிறு சிறு

அதாவுல்லாவுக்கும் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம். Sainthamaruthu

Image
சாய்ந்­த­ம­ருதுக்­கென தனி­புதிய நகர சபை­யொன்­றினை தேர்­த­லுக்கு முன்பு நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னம்....!!! இது­வரை காலம் கல்­முனை மாந­கர சபையின் அதி­கா­ரத்தின் கீழி­ருந்த சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­கென தனி­யான புதிய நகர சபை­யொன்­றினை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.‘முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் இது­வ­ரை­காலம் சாய்ந்­த­ம­ருது மக்­களை ஏமாற்றி வந்த காலம் மலை­யே­றி­விட்­டது. எங்­களை நாங்­களே ஆளப்­போ­கிறோம். இது எமது நீண்­ட­காலப் போராட்­டத்தின் வெற்றி, எல்லாப் புகழும் அல்­லாஹ்­வுக்கே’ என்று சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார். கிழக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­திகள், சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள், கல்­முனை மாந­கர சபையின் சுயேச்­சைக்­குழு (தோடம்­பழ சின்னம்) உறுப்­பி­னர்கள் மற்றும் அரச அதி­கா­ரி­க­ளுக்கும், பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது. அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்

தெ.கி.ப.கழகத்தில் 'பாலியல், பாலியல் ரீதியான பால் நிலை வன்முறைகள்' தொடர்பான செயலமர்வு.

Image
பல்கலைக்கழக ஊடக பிரிவு- தெ ன்கிழக்கு பல்கலைக்கழக பால் நிலை, சம நிலை சமத்துவ நியைத்தினால் கலை, கலாசார பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடங்களினதும் சிரேஷ்ட மாணவர்களுக்கான 'பால் நிலை, சம நிலை சமத்துவம்' என்ற தலைப்பில் பாலியல், பாலியல் ரீதியான பால் நிலை வன்முறைகள் தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக பால் நிலை, சம நிலை சமத்துவ நியைத்தினால் அதன் பணிப்பாளரும், சிரேஸ்ட பிரதி நூலகருமான திருமதி எம்.எம். மஸ்றூபா தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்; பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலை, கலாசார பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூக்கர், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட், நூலகர் எம்.எம்.றிபாய்டீன், அரசியல் துறைத் தலைவரும், பல்கலைக்கழக ஊடகப் பிரிவு பணிப்பாளருமான கலாநிதி எம்.எம்.பாஸீல், பேராசிரியர்களான எம்.ஐ.எம்.கலில், எம்.ஏ.எம்.றமீஸ் அப்துல்லாஹ் உட்பட விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை தொடர்பான குற்றச்சாட்டுகள்

Image
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது...!!! கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் வைத்தியர்கள் ஒன்றியம் ஆகியன ஏற்பாடு செய்த இரு வேறு ஊடகவியலாளர்கள் சந்திப்பு  வைத்திய சாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் சில தனியார் தொலைக்காட்சிகளில்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாலியல் துஸ்பிரயோம் நடைபெறுவதாகவும் கடமைக்கு வருபவர்கள் கடமையில் ஈடுபடுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வெளியான செய்தி வைத்திய சாலையின் நற்பெயருக்கும் தாதி உத்தியோகத்தர்களுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் இந்த ஊடகவியளாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் செயலாளர் கருத்து தெரிவிக்கும் போது, இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும் இவருக்கு எதிராக தாதி உத்தியோகத்தர்கள் பலரும் கிட்டத்தட்ட 145 குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலம் எமக்கு கிடைத்துள்ளன. இதற்குரிய விசாரணைகள

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

Image
ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

ගුවන්තොටුපළට නව මාර්ගයක් ඉදිකිරීමට පියවර

 (මිනුවන්ගොඩ - අයි. ඒ. කාදිර් ඛාන්)    බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන්තොටුපළට පැමිණෙන දේශීය හා විදේශීය මගීන්ගෙන්, කටුනායක  ප්‍රදේශයේ මාර්ග තදබදය වළක්වා ගැනීම සඳහා කටුනායක ගුවන්තොටුපළ දෙසට විශේෂ මාර්ගයක් ඉදිකිරීමට තීරණය කර තිබේ.  ඒ අනුව, රුපියල් මිලියන 600 ක පමණ වියදමින් මෙම නව මාර්ගය ඉදිකරන බව, කැබිනට් ප්‍රකාශක අමාත්‍ය රමේෂ් පතිරණ මහතා පැවසීය.     කැබිනට් තීරණ ප්‍රකාශ කරන මාධ්‍ය හමුවක් තොරතුරු දෙපාර්තමේන්තුවේදී පැවැත්විණි.  ඔහු තවදුරටත් කියා සිටියේ,     ගුවන්තොටුපළට පැයෙන් පැයට අති විශාල මගීන් පිරිසක්  පැමිණෙන හේතුවෙන්, අධික වාහන තදබදයක් සිදුවනු ඇත. මේ හේතුවෙන්, වෙනත් සංචාරකයින්ට ද  දුෂ්කරතාවන්ට මුහුණ දීමට සිදුවී තිබේ. එහි ප්‍රතිඵලයක් ලෙස විකල්ප මාර්ගයක් ඉදිකිරීමට කැබිනට් මණ්ඩලය අවසර ලබාගෙන තිබුණි.     මේ අනුව,  ආයෝජන මණ්ඩලය හා මිනුවන්ගොඩ හරහා කටුනායක  ගුවන්තොටුපළට පිවිසෙන මාර්ග දෙක සම්බන්ධ කරගෙන මෙම මාර්ගය සංවර්ධනය කිරීමට පියවර ගෙන ඇති  බව ඔහු පැවසීය.

රජයේ බදු සහන ප්‍රතිලාභ ජනතාවට

මිනුවන්ගොඩ - අයි. ඒ. කාදිර් ඛාන්)     රජයේ බදු සහන ප්‍රතිලාභ ජනතාවට ලබා දීමේ අරමුණින් භාණ්ඩ 15,000 කට වැඩි ප්‍රමාණයක මිල අඩු කිරීමට පියවර ගෙන ඇති බව, පාරිභෝගික කටයුතු අධිකාරිය පවසයි.     භාණ්ඩ නිෂ්පාදනය හා ආනයනය කරන සමාගම් සියයකට අධික සංඛ්‍යාවක් මෙම මිල අඩු කිරීම පිළිබඳව ලිඛිතව අධිකාරියට දැනුම් දී ඇත.  ඒ අනුව, පාරිභෝගික කටයුතු අධිකාරිය මෙම නිෂ්පාදනවල නම් සහ මිල පිළිබඳ විශේෂ විශ්ලේෂණයක් දැනටමත් ආරම්භ කර තිබේ.     එබැවින්, නිෂ්පාදනවල නම් සහ මිල ගණන් පිළිබඳව පාරිභෝගිකයාට හැකි ඉක්මනින් පුවත්පත් මගින්  දැනුම් දෙන ලෙස පාරිභෝගික කටයුතු අධිකාරිය, අදාළ සමාගම්වලින් ඉල්ලා ඇත.     රජයේ බදු සහන ප්‍රතිපත්තිවලට අනුකූලව ඉදිකිරීම්, ආහාර, ළමා නිෂ්පාදන, ආලේපන සහ විදුලි උපකරණ ඇතුළු විවිධ භාණ්ඩවල මිල අඩු කිරීමට නියමිතය.     මීට පෙර පාරිභෝගික කටයුතු අධිකාරිය විසින් කිරි පිටි සහ සිමෙන්ති සඳහා මිල අඩු කිරීමට පියවර ගෙන තිබුණි.     එසේම, පසුගිය වසරේ දෙසැම්බර් පළමු දින සිට වැට් බද්ද සියයට 8 කින් අඩු කිරීම සහ ජාතික ඉදිකිරීම් බද්ද ඉවත් කිරීම යන ප්‍රතිලාභ පාරිභෝගිකයා වෙත ළඟා වී ඇත්දැයි සොයා බැලීමට, ප

அரசியல் காய்நகர்த்தல்கள்; தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல் அவசியம்

Image
கிழக்கு முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவிப்பு “மார்ச் மாதம் முதலாம் திகதிக்குப் பின்னரே பாராளுமன்றத்தை கலைக்கும் நிலை யுள்ளபோதும் அதற்கு முன்னர் அதனை கலைப்பதற்கான முஸ்தீபுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மற்றொரு அங்கமாகவே முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் வகையில் ஆங்காங்கே மக்களுடன் இதுவரை எது வித சம்பந்தமுமில்லாத புதிய முகங்களை இறங்கிவிடப்பட்டு அவர்களை வேட்பா ளர்களாக்கும் நடைமுறைகளும் அதிகரித்து வருகின்றன. இதுவிடயத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமானது என்பதை அறிவு றுத்த விரும்புகிறேன். இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமாருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார். அன்மையில் ஏறாவூரிலுள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற அமைப்பாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்தபோது கூறியதாவது:- சிறுபான்மை சமூகங்களுக்கு விகிதாசார முறைமையினால் கிடைக்ககூடிய பாராளு மன்ற பிரதிநிதித்துவமே மிகப்பெரும் அரணாக இருந்து வருகின்றது.

கல்முனை மாநகர முதல்வராக இருந்த காலத்தில் என்னால் முடிந்தளவு மக்கள் பணி செய்துள்ளேன்.

Image
சமூகத்தை பற்றி சிந்திக்கின்றவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் .- கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ================ ( எம்.என்.எம்.அப்ராஸ்) கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் மாதாந்த ஒன்று கூடல் ஸ்தாபக தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் நேற்று (08) இடம்பெற்றது. இதன் போது கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும்,அகில.இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும்,மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகருமான சிராஸ் மீராசாஹிப் , பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் பதவி அதிகாரம் என்பது இறைவன் கொடுப்பதாகும் . கடந்த கல்முனை மாநகர முதல்வராக இருந்த காலத்தில் இந்த கல்முனை மாநகர் மக்களும் ,இப் பிராந்தியத்தில் இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் என்னால் முடிந்தளவு மக்கள் பணி செய்துள்ளேன். இந்த நிமிடம் வரை மக்களுக்காய் என்னால் முடிந்த சேவையை செய்து வருகிறேன். இந்த அமைப்பின் ஊடாக இளைஞர் ,யுவுதிகளாகிய நீங்கள் சரியான வழிகாட்டல் மூலம் நாட்டிற்கும் ,சமூகத்திற்க்கும் உங்கள் நல் பங்களிப்பை முன்னெடுக்க வேண்டும் . எதிர்வரும் நாட்

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி உருவானது !

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி”புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை ரில்கோ விருந்தினர் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தன . ஆயினும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப நேரத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கமைய தமிழ் மக்கள் கூட்டணி, ஈபீஆர்எல்எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

கௌரவ ஹரிஸ் பா.உ. அவர்கட்கு “

Image
அல்லாஹ்வின் திரு நாமத்தால், கௌரவ ஹரிஸ் பா.உ. அவர்கட்கு “ அஸ்ஸலாமு அலைக்கும்” கல்முனையின் புரையோடிப்போய் உள்ள பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணை கொண்டு வருமாறு அன்பாக வேண்டுகின்றேன் . அவை வருமாறு. கௌரவ சபாநாயகர் அவர்களே! கௌரவமான இந்த சபையிலே கல்முனையில் புரையோடிப்போய் இருக்கும் பிரச்சினைக்கு இன. பிரதேச நல் லிணக்கத்துக்கான தீர்வாக எனது பிரேரணையை முன்வைக்கின்றேன். கௌரவ சபாநாயகர் அவர்களே! கல்முனை என்பது ஒரு பிரதானமான பிரசித்தி பெற்ற நகரமாகும். அது இலங்கை முஸ்லிம்களின் முக வெற்றிலை. கல்முனையில் “முனை” என்னும் ஒரு துறைமுகமுண்டு. அதில் 1912ம் ஆண்டு முதல் தென்மாகாண சிங்கள சகோதரர்களும், உள்ளுர் முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையாக  மீன்பிடித் தொழிலில் ஈடுபடலானார்கள். கல்முனையின் பொருளாதாரத்தில் 50% மீன்பிடியிலிருந்தே பெறப்பட்டது. ஒரு போக வேளாண்மை செய்யும்  சுமார் 8000 ஏக்கர் விவசாய காணிகள் உரிய பாச்சல் வடிச்சலின்றி மாரிகாலத்தில் தாழ்வதும், நீர் தேங்கும் குளங்கள் ஏக்கர் கணக்கில் சட்ட விரோதமாக  மூடப்பட்டுள்ளதனால் பாச்சலுக்கு நீரில்லாமலும் விவசாயம் பாழ்படுத்தப்