விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு நடவடிக்கை !
Posted by aljazeeralanka.com on January 23, 2020 in | Comments : 0
-வன்னி செய்தியாளர் –
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றையதினம் (23)பொலிஸாரால் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .
இறுதி யுத்த நேரத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு பின்புறமாக இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டது .
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
மிக நீண்ட நேரமாக அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment