ஈரானின் ஏவுகணை தாக்கியது அமெரிக்க இராணுவ முகாமில் இருந்த பழைய கட்டிடங்களின் கூரைகளே!!!

அமெரிக்கா ஈரானின் முக்கிய ஜெனெரல் ஒருவரைக் கொலைசெய்தது.  ஈரான் கொடுத்த "பதிலடி" அமெரிக்க இராணுவ முகாம்கள் இரண்டிலிருந்த இரண்டு பழைய கட்டிடங்களின் கூரைகளில் ஓட்டைபோட்டது மாத்திரம்தான்.

ஈரான் தனது ஏவுகணைகளை ஏவுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பே அங்குள்ள இராணுவத்தினருக்கு குறித்த கட்டிடங்களை விட்டும் விலகியிருக்குமாறு அறிவித்திருந்தது; அவர்களும் விலகியிருந்தார்கள். தங்களின் ஏவுகணைகள் தவறிப்போயாவது ஒரு அமெரிக்கரையாவது காப்படுத்தி விடக்கூடாது என்று அவர்கள் பிரார்த்தனை வேறு செய்திருக்கவேண்டும்.

நாம் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும்: எல்லா முஸ்லிம் நாடுகளையும் போல ஈரானியரும் வாய்ச்சொல்லில்தான் வீரர்கள்; செயலில் கோழைகளே. "அமெரிக்காவுக்குச் சாவு!" என்று கோஷம்போட்டுக்கொண்டே 56 ஈரானியர்கள் நெரிசலில் அகப்பட்டு மரணித்திருக்கின்றார்கள். ஈரானிய அரசு அந்நாட்டு மக்களை இவ்வாறு கோசம்போடவும், அனாவசியமாகச் செத்துமடியவுமே பழக்கப்படுத்தியிருக்கின்றது.

அமெரிக்காவிற்கு எதிராக ஈரானோ ஏனைய எந்த முஸ்லிம் நாடோ எந்தவிதமான தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதில்லை. இதற்கான காரணம் இவர்கள் தேசிய அரசுகளாகப் பிரிந்து நிற்பதுதான். எப்போது முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒரே அரசியல் கொடியின் இணைகின்றார்களோ அன்றுதான் அவர்களால் தம்மைக் காக்கமுடியும்.

சவூதி அரசு அமெரிக்காவின் எடுபிடி என்று நாம் எடுத்துச் சொன்னபோது சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு கூட்டம் மல்லுக்கு வந்தது; ஐஸிஸ் இரத்த வெறிகொண்ட பாசிஸ அமைப்பு என்று சொன்னபோது இன்னுமொரு கூட்டம் சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு கூட்டம் மல்லுக்கு வந்தது; இப்போது சொல்கின்றோம்: ஈரானும் அமெரிக்காவின் எடுபிடியே: அது எமன் நாட்டிலும், சிரியாவிலும் மனிதப்படுகொலைகள் செய்த / செய்துகொண்டிருக்கின்ற ஒரு நாடு. ஈராக்கிற்குள்ளுள்ளும், ஆப்கானிஸ்தானிற்குள்ளும் அமெரிக்க ஆக்கிரமிப்பை நிறுவ உதவிய / உதவிக்கொண்டிருக்கின்ற நாடு. இவற்றிற்கான ஆதாரங்கள் நிறைந்துகிடக்கின்றன. ஈரானின் தேசிய அரசால் முஸ்லிம்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.
Mohamed Faisal

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !