அம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறை, சென்னல் கிராமத்தில் தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, வீடொன்றை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் இதன்போது குறித்த வீட்டிலிருந்து தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5.5 எம்.எம். தோட்டா 52
7.5 எம்.எம். தோட்டா 12
வெடிமருந்து 600 கிராம்
ஈயக் பந்து மற்றும் துண்டுகள் ஒரு கிலோ 40 கிராம்
கழற்றிய டெட்னேட்டர் பகுதிகள் 03
கட்டுத்துவக்கு குழாய் 01 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
Post a Comment