தனியார் வர்த்தகர்களால் நெல் விலை குறைப்பு, விவசாயிகள் கொந்தளிப்பு - அரசு உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்ய வேண்டுமென விவசாய அமைப்புக்கள் கோரிக்கை

அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லுக்கான விலையினை தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் திட்டமிட்டு விலைக் குறைப்பு செய்து வருவதாக மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.சி. சிறாஜூதீன் தெரிவித்தார்.

அரசாங்கம் உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய வேண்டுமென ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு அக்கரைப்பற்று கல்லோயா வலது கரை வதிவிட திட்ட முகாமையாளர் அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்றது, இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவ்வாறு குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக் கூடி நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் நெல்லை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்கின்றார்கள். அம்பாறை மாவட்ட விவசாயிகள் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள்.

65.5 கிலோ கிராம் கொண்ட ஒரு பேக் நெல்லுக்கான விலை 3500 ரூபா வாக காணப்பட்டது. அது தற்போது 2800 வரை குறைவடைந்துள்ளது.

அரிசியின் விலை ஒரு கிலோ கிராம் ரூபா 98 ஆகவே இருந்து வருகின்ற நிலையில், நெல்லுக்கான விலையை மாத்திரம் தனியார் வர்த்தகர்கள் திட்டமிட்டு குறைப்புச் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகின்றனர்.

இதேவேளை வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களை பிரதேசங்களுக்குள் நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.

இவ்வாறு விவசாயிகள் ஒவ்வொரு போகமும் எதிர்நோக்கி வருகின்ற இவ்வாறான நஷ்டங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் முறையான நெல் கொள்வனவுக்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ் ஊடக மாநாட்டில் திட்ட முகாமையாளர் எம்.எம். நழிம் விவசாய அமைப்பின் செயலாளர் என்.எல்.எம். அகமட், உப செயலாளர் ஐ.எல்.ஏ. ஹக்கீம், பொருலாளர் ஏ.பி. ஜலால்டீன் உட்பட விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

- அம்பாரை நிரூபர்

Comments

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !