மருதானை ரயில் நிலையத்திற்கு முன்பாக மானிய விலையில் மரக்கறிகள், உலர் உணவு விற்பனை( மினுவாங்கொடை நிருபர் )

   கொழும்பு, மருதானை, ரயில் நிலையத்திற்கு முன்பாக மானிய விலையில் மரக்கறி வகைகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளை விற்பனை செய்ய, ரயில்வே இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை   எடுத்துள்ளார்.
 இந்நடவடிக்கைத் திட்டம், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில், மருதானை ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ரயில்வே சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆரம்பித்துள்ளது.
   ரயில்களில் பயணிக்கும் அரச ஊழியர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் சுட்டிகாட்டியுள்ளது.
   இதற்கமைய, மரக்கறி வகைகள் அடங்கிய பொதியொன்றை 500 ரூபாவிற்கும், உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை 500 ரூபாவிற்கும், மருதானை ரயில் நிலையத்திற்கு முன்பாகக் கொள்வனவு செய்ய முடியும்.
   இதற்கமைய, உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியில் ஒரு கிலோ கிராம் பருப்பு, 2 கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசி, ஒரு கிலோ கிராம் சீனி மற்றும் சிறிய டின் மீன் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
   மரக்கறி வகைகள் அடங்கிய  பொதியில் கெரட், லீக்ஸ், போஞ்சி, வற்றாழைக் கிழங்கு, பூசணி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, எலுமிச்சை, பொன்னாங்கன்னி ஆகியன அடங்கியுள்ளன. 
   இந்தத் திட்டத்தை ஆரம்பித்து கருத்து வெளியிட்ட ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, புறக்கோட்டை ரயில் நிலையத்திலும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு,  நாடளாவிய ரீதியிலும்  இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !