சாய்ந்தமருதுக்கான சபையை பெறும் மிக இலகுவான சந்தர்ப்பம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்பதில் பலனில்லை.
Posted by aljazeeralanka.com on January 26, 2020 in Mubarak | Comments : 0
சாய்ந்தமருதுக்கான சபையை பெறும் மிக இலகுவான சந்தர்ப்பம் இருந்தும் ரவூப் ஹக்கீம் போல் செயற்பட்டுவிட்டு இப்போது ஒப்பாரி வைப்பதில் பலனில்லை.
2001ம் ஆண்டு தேர்தலில் மு. கா 12 ஆசங்களை பெற்றது. இதுதான் அக்கட்சி பெற்ற உச்ச பச்ச வரலாற்று வெற்றியாகும். அப்போது ஒஸ்லோவில் புலி அரசு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. அது இரு தரப்பு பேச்சுவார்த்தையாக இருந்தால் தீர்வும் இரு தரப்புக்குமே கிடைக்கும் என்றும் இது முஸ்லிம் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி உருவாக்கத்தின் அர்த்தத்தையே இல்லாதொழிக்கும் என பகிரங்கமாக சொன்னேன்.
ஆனால் முஸ்லிம் தனி தரப்பைவிட தானொரு ஐ தே கவின் விசுவாசமிக்க அமைச்சராக இருக்க வேண்டும் என கருதிய ஹக்கீம் முஸ்லிம் தனித்தரப்பாக கலந்து கொள்ளும் தருணம் இதுவல்ல என கூறி ஹக்கீம் அரச தரப்பாக கலந்து கொண்டார்.
இவ்வாறு அருமையான சந்தர்ப்பத்தை ஹக்கீம் தவறு விட்டது போல் சாய்ந்தமருதுக்கான சபை கிடைப்பதற்குரிய அருமையான சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை தவற விட்டு விட்டு கல்லால் கையால் பறிக்க முடிந்ததை கோடாரி கொண்டு பறிக்க முற்படுகிறார்கள்.
2010ம் ஆண்டு பொது தேர்தலின் போது "கல்முனையை மூன்றாக பிரிப்பதன் மூலம் சாய்ந்தமருதுக்கு சபை" என்ற கோரிக்கையை முன்வைத்தது உலமா கட்சியாகும். இதனை ஏற்றுக்கொண்ட சாய்ந்தமருதை சேர்ந்த சில இளைஞர்கள் முபாறக் அப்துல் மஜீதுடன் இணைந்து பொது தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் சாய்ந்தமருது இவர்களை பார்த்து சிரித்தது.
அப்போது உலமா கட்சி, மஹிந்த தலைமயிலன upfaயின் பங்காளி கட்சி. அதனால் அந்த தேர்தலில் சாய்ந்தமருது பெருவாரியாக எமது கட்சிக்கு வாக்களித்தால் மஹிந்த மூலம் சபை பெறுவது இலகு என கூறினோம். அப்போது கோடீஸ்வரனோ, கருணாவோ கல்முனை தமிழர்களோ பலம் பெற்றிருக்கவில்லை. பிரபாகரன் ஒழிக்கப்பட்டதால் மானசீகமாக ஒடுங்கிப்போயிருந்த சந்தர்ப்பம். சாய்ந்தமருது விழிக்கவேயில்லை.
இப்போது அவதிப்படுவதை பார்க்கும் போது எப்போதும் முன் கூட்டியே அறிவை எனக்கு தரும் இறைவனுக்கே எல்லாப்புகழும்.
- முபாறக் மௌலவி, கபூரி, மதனி
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment