அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் பதிவு செய்ய வேண்டும் - பிரதமர்

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என பிரதமரும் புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

புத்தசாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து இஸ்லாமிய மத்ரஸா பாடசாலைகளையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களை ஒழுங்கு முறைக்கு மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் தொடர்பாக முறையாக ஆராய்ந்து முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நேர்த்தியான பாடத்திட்டம் ஒன்றை ஏற்படுத்துமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

- MRM. வசீம்

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !