குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை ரஞ்சன் பாராளுமன்றில் கையளிக்கவில்லை - பிரதி சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளைப் பாராளுமன்றத்திடம் கையளிக்கவில்லை எனப்றி பிரதி சபா நாயகர் ஆனந்த குமாரசி இன்று தெரிவித்துள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாவது, எனக்கு இரண்டு தினங்கள் நீதிமன்றத்தில் இருந்து பிணை வழங்கியிருந்தால் என்னிடமிருக்கும் அனைத்து குரல் பதிவுகளையும் சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். 

சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்னுடைய குரல் பதிவுகளையே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது என்னுடைய வீட்டில் இருந்து பொலிஸாரினால் ஹாட்டிஸ்க் ஒன்று, மடிக்கணனி ஒன்று மற்றும் எனது 4 கையடக்க தொலைபேசிகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. 

தற்போது நான் சிறைக்காவலில் இருக்கின்றேன். எனது குரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. அதனை மீள் பதிவு செய்துகொள்ள முடியாமல் இருக்கின்றது என அவர் தெரிவித்தை அடுத்தே தனது குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளைப் பாராளுமன்றத்திடம் கையளிக்கவில்லை எனப் பிரதி சபா நாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය