கல்முனை ரோயல் வித்தியாலயத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
Posted by aljazeeralanka.com on January 16, 2020 in | Comments : 0
(எம்.என் எம்.அப்ராஸ்)
கல்முனை ரோயல் வித்தியாலயத்தில் இவ்வாண்டு (2020) தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு
பாடசாலையின் அதிபர் எம்.எச் .எம்.அன்சார் தலைமையில் (16) இன்று இடம்பெற்றது.
புதிதாக அனுமதி பெற்ற மாணவர்கள் தரம் -2 மாணவர்களால் வரவேற்க்கப்பட்டதுன்
பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் மன நல மருத்துவர் யூ. எல்.சராப்தீன் மற்றும் கெளரவ அதிதியாக கல்முனை கல்வி வலய ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரிய ஆலோசகர் வை .ஏ.கே.தாசீம் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment