புதிய அரசியல் கூட்டணி – சஜித் தலைவர் – சம்பிக்க பிரதித் தலைவர்

BREAKING NEWS

புதிய அரசியல் கூட்டணி – சஜித் தலைவர் – சம்பிக்க பிரதித் தலைவர் – சிங்கள வாக்குகள் முக்கிய இலக்கு !
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை வீட்டுக் கொடுப்பதில் ரணில் விக்கிரமசிங்க அக்கறை காட்டாத நிலையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதை சஜித் பிரேமதாச எம் பி இறுதி செய்துள்ளார்.

இதன்படி சஜித் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் .

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த நேற்றைய தினம் எதிர்பார்க்கப்பட்ட போதும் அது ரணிலால் இழுத்தடிப்பு செய்யப்பட்டதால் புதிய கூட்டணி அமைவது இறுதியாகியுள்ளது.

இந்த கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி உட்பட இதர கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் அதேசமயம் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை வகித்தாலும் சஜித் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக இருப்பாரென தெரிகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளில் கண்ட சரிவை சீர்செய்யும் வகையில் சம்பிக்க ரணவக்க எம்பியை கூட்டணியின் பிரதித் தலைவராக நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தலைமைத்துவப் பிரச்சினை குறித்துப் பேச ரணில் – கரு ஜயசூரிய – சஜித் ஆகியோர் சந்திப்பொன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அது இனி சாத்தியப்படாதென ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்