50,000 பட்டதாரிகளை அரச சேவைக்கு இணைப்பதற்காக இதுவரை விண்ணப்பம் எதுவும் கோரப்படவில்லை, அரசியல்வாதிகள் விநியோகிக்கும் விண்ணப்பத்திற்கு ஏமாறாதீர்கள்

50,000 பட்டதாரிகளை அரச சேவைக்கு இணைப்பதற்காக இதுவரை விண்ணப்பம் எதுவும் கோரப்படவில்லை. சில அரசியல்வாதிகள் விண்ணப்பப்படிவங்களை விநியோகித்து வருவதை கண்டு ஏமாற வேண்டாமென தகவல் தொலைத்தொடர்பு இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

ஒவ்வொரு அமைச்சிலும் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைய பட்டதாரிகள் நியமிக்கப்பட இருப்பதாக கூறிய அவர், தொழில் பெறுவதற்காக எவரது பின்னாலும் அலையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

தகவல் தொலைத் தொடர்பு இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் 50,000 பட்டதாரி நியமனம் தொடர்பில் வினவப்பட்டது. சிலர் விண்ணப்பம் விநியோகித்து வருவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கும் பதிலளித்த அமைச்சர், 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் அரசின் திட்டத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சிலர் விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர். 

வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் அழைத்து சில அரசியல்வாதிகள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர். ஆனால் அரசியல் பேதமின்றி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும்.

அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்கள் குறித்து நிதி அமைச்சு தகவல் ​கோரியுள்ளது. திட்டமிடல் அமைச்சில் பதிவு செய்துள்ள பட்டதாரிகள் வெற்றிடங்களுக்கு ஏற்ப நியமிக்கப்படுவார்கள். இது தொடர்பில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படும்.

சில அரசியல்வாதிகள் தமது அரசியல் நலனுக்காக விண்ணப்பம் வழங்கி வருகிறார்கள். ஆனால் அதற்கு ஏமாற வேண்டாம்.

எமது அரசாங்கம் 2011 டிசம்பர் 31 வரை வெளியான சகல பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கியது. ஆனால் கடந்த அரசு ஆண்டு அடிப்படையில் அன்றி உள்ளக வெளிவாரி பட்டதாரி என பிரித்து நியமனங்கள் வழங்கியது.

ஆனால் எமது அரசு ஆண்டு அடிப்படையில் தொழில்வாய்ப்பு வழங்கும். வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டமும் வெளிப்படை தன்மையுடனே முன்னெடுக்கப்படும்.

-நியூஸ்வீவ்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்