கல்முனை இளம்பட்டதாரிகள் அமைப்பினால் 2019 இல் O/L எழுதிய மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வழிகாட்டல் கருத்தரங்கு சிறப்பாக இடம்பெற்றது.
Posted by aljazeeralanka.com on January 23, 2020 in | Comments : 0
கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால்(Kalmunai Undergraduate Association - KUA) கடந்த (22.01.2020) 2019 இல் கா.பொ.த.சாதாரண தரம் (O/L) எழுதிய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான உயர்தர கற்கைகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஊக்குவித்தல் கருத்தரங்கு கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்விற்கு வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான HM.Nijam (முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம்) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் உயர்தரத்தில் தங்களது அடைவு மட்டங்களை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது மற்றும் பல்கலைக்கழக நுழைவை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது எனும் தொணிப்பொருளில் உரையாற்றினார்,
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட்ட விரிவுரையாளரான FH.Shibly Ahamed (அரபு மொழிகள் மற்றும் இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடம்) அவர்களும் இந் நிகழ்வில் ஒரு வளவாளராக கலந்துகொண்டு உயர்தரத்தில் காணப்படும் பல்வேறு துறைகள் சம்மந்தமாகவும் அந்த துறைகளை தெரிவுசெய்வதால் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு எந்த எந்த துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் தொணிப்பொருளிளும்,
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட்ட விரிவுரையாளரான Risath Aatham Lebbbe (பொறியியல் பீடம்) அவர்களும் இந்த நிகழ்வில் ஒரு வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களின் வாழ்க்கை வெற்றிக்கான பல ஊக்குவித்தல் வார்த்தைகளையும் உரை நிகழ்த்திசென்றிருந்தனர்.
இந்த நிகழ்விற்கு கல்முனை பிராந்தியத்தைச்சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்பட சுமார் 120 பேர் கலந்து சிறப்பித்தனர்.
-தானிஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment