திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா மற்றும் வெள்ளை மணல் பிரதேசங்களில் இருந்து 1656 கிலோகிராம் டி.எம்.டி வெடிமருந்துகளுடன் இருவரை இன்று கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று காலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் திருகோணமலை மட்டக்களப்பு வீதி, கிண்ணியா பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து 685 கிராம் டி.ம்.டி வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.
அத்துடன், தொடர்ந்து அவரை விசாரித்ததில் அவர் சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிஞ்ரா நகர், வெள்ளை மணல், சீனன் குடா பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் 44 வயதுடைய எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளை அடுத்து கிண்ணியா டி சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கை செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவரிடமிருந்து 971 கிராம் டி.எம்.டி வெடிமருந்துகளுடன் கைப்பற்றப்பட்டதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று, முருகன் கோயிலடி பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் அவரின் வயது 55 எனவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
Post a Comment