நாம் நடத்திய 15 ஏவுகணை தாக்குதல்களில் 80 அமெரிக்க ''தீவிரவாதிகள்'' கொல்லப்பட்டுள்ளனர் - ஈரான்
Posted by aljazeeralanka.com on January 08, 2020 in வெளிநாடு | Comments : 0
ஈரான் இன்று ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்குவைத்து மேற்கொண்ட 15
ஏவுகணை தாக்குதல்களில் 80 அமெரிக்க தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
https://www.deccanherald.com/liveblog/us-iran-tensions-live-80-american-terrorists-killed-in-missiles-strike-says-iranian-state-tv-791345.html
ஈரானின் புரட்சிகர காவல்படையணியை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ள ஈரானின் அரச தொலைக்காட்சி 15 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும் அதில் ஒன்று கூட இடைமறித்து சுட்டுவீழ்த்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அமெரிக்க ஹெலிக்கொப்டர்கள் இராணுவசாதனங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மேலும் 100 இலக்குகளை இனம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஈரான் அமெரிக்கா பதில் தாக்குதலை மேற்கொண்டால் அந்த இலக்குகள் தாக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏவுகணைகள் செலுத்தப்படும் வீடியோக்களை ஈரான் வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment