சட்டவிரோத மர கடத்தல் மற்றும் அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த நபருக்கு அபராதத்துடன் 100 மரக்கன்றுகள் நடுமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மர கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நீதிமன்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி குற்றவாளியெனச் சந்தேகத்தின் பேரில் கைதானவர் குற்றத்தினை ஒப்புக்கொண்ட நிலையில் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
வெட்டப்பட்ட மரம் மற்றும் சேதமாக்கப்பட்ட அரச சொத்துக்களிற்காக ரூபா ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறும், வன வள பாதுகாப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கமைவாக 100 மரக்கன்றுகளை நாட்டுமாறும் இதன்போது நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Post a Comment