எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
கல்முனை பிரதேச செய்லக பிரச்சினையை முஸ்லிம் தரப்புடனும் பேசிவிட்டே முடிவெடுக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கருணாவின் கருத்துக்கு பதிலளித்து பேசும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த சகோதர கட்சிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு இன்று (30) அலரி மாளிகையில் நடை பெற்றது. இதன் போது 40 சிறு கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய கருணா அம்மான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் அதனை செய்து தந்தால் போதும். அதுதான் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல். அதை மட்டும் செய்து தந்தால் போதும் என்றார். இதன் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தனது கருத்தை முன்வைக்கையில் நாம் 2005ம் ஆண்டு முதல் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே ஆதரவாக