ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-02 தம்பிமுத்து வீதியில் கட்டடக் கொந்தராத்து பணியில் ஈடுபட்டு வரும் நபருடைய பழைய வீடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.
அத்துடன் எரிந்த இயந்திரத்திற்கு அடியில் மனித உடலைப் போன்ற ஒரு உருவம் எரிந்து கிடப்பதைப் போன்று காணப்படுவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருவதாகவும் திருக்கோவில் பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிசார் மற்றும் காஞ்சிரம்குடா இராணுவத்தினர் புனராய்வு உத்தியோகத்தர்கள் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.
நேற்று புதன்கிழமை இரவு வீடு எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல இலட்சம் பெறுமதியான நெல் அறுவடை இயந்திரமும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் இந்த இயந்திரத்திற்கு அடியில் அடையாளம் காண முடியாத நிலையில் ஒரு உருவம் எரிந்து கிடப்பதாகவும் இது மனிதனுடையதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு அம்பாறை தடயவியல் குற்றப் பொலிசாருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வீட்டின் பிரதான வாயில் பகுதியில் உள்ள கேட்டில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இவ் வீட்டு உரிமையாளர் அவருடைய வேறு ஒரு வீட்டில் விசித்து வருவதுடன் இவ் வீடானது அவருடைய தொழில் ரீதியான உபகரணங்கள் மற்றும் களஞ்சிய வீடாக பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக வீட்டு உரிமையாளரின் மனைவி தெரிவித்து இருந்தார். இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a comment