அரச அதிபர்களிடம் முன்னாள் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்.
Posted by aljazeeralanka.com on December 24, 2019 in | Comments : 0
ஊடகப்பிரிவு.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உல ர் உணவுகளை வழங்கி வைக்குமாறும் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுமாறும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் இந்த அவசர வேண்டுகோளை அவர் விடுத்திருப்பதுடன். வெள்ளத்தின் காரணமாக அழிவுக்குள்ளானோரின் சொத்துக்களுக்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டுமெனவும் அரசையும் வேண்டியுள்ளார்.
"பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மாத்திரமன்றி மழைநீர் காரணமாக நிரம்பிய குளங்கள் திறந்துவிடப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளமும் சேர்ந்து மக்களை கடுமையாக பாதித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் இலவங்குளம்,6ம் கட்டை ,4ம் கட்டை மற்றும் தில்லையடி உட்பட பெருமளவான பிரதேசங்கள் வெள்ளத்தின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ளது. மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். இதனால் இவர்களுக்கு நாங்களும் உதவிகள் செய்து வருகின்றபோதும்.தொடர்ந்தும் உதவி தேவைப்படுகின்றது. அதுமாத்திரமன்றி விவசாய பயிர்கள், இறால்பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே உரிமையாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன்.மக்களின் குறைகளை கேட்டறிந்தார்..
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment