ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
கொழும்பு புதுக்கடை ,பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்குமிடையில் நான் வசித்து வருகிறேன்..
சுமார் 10 முதல் 12 வயதுள்ள சில முஸ்லிம் சிறார்கள் இந்த வீதிக்கருகில் எந்த காரணமும் இல்லாமல் ஏதோ ஒரு பொழுதுபோக்குக்காக பட்டாசு வெடித்து மகிழும் நிகழ்வு கடந்த பல மாதங்களாகவே இடம்பெற்று வந்தது..
சில வாரங்களுக்கு முன்னர் எனது காருக்கடியில் பட்டாசை அவர்கள் கொளுத்தியபோது அவர்களை நான் கடிந்து இப்படி செய்ய வேண்டாமென சொன்னேன்..எனது நண்பரான முதிய ஹாஹியார் ஒருவரும் அதனை ஏற்று என்னுடன் இணைந்து அவர்களை கண்டித்தார்.
இன்று -29- மீண்டும் அந்த சிறார்கள் பட்டாசு மற்றும் பம்பரம் என்று சுழலும் பட்டாசுகளை மாலை கருக்கும் நேரம் போட்டார்கள்... வீதியில் போவோர் வருவோர் அச்சப்படும் வகையில்... வீதியில் போகும் ஓட்டோக்கள் மீது பாயும் வகையில் அவை இருந்தன.
பண்டாரநாயக்க மாவத்தை தேவாலயத்தினருகே பட்டாசுகள் சென்றதால் மாலை ஆராதனை குழம்ப அங்கு காவலுக்கு நின்ற இராணுவச் சிப்பாய் சிறார்களை நிறுத்தும்படி சொல்லிக்கொண்டே அவர்களை விரட்டி ஓடினார்... இன்னுமொரு சிப்பாய் ரி 56 துப்பாக்கியுடன் ஓடினார்...
நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்... அன்று கண்டித்த ஹாஜியார் அப்போது அந்த இடத்திற்கு வந்து என்னை பார்த்தபடி நின்றார்... இருவரும் செய்வதறியாது நின்றோம்...
அவர்களை விரட்டிச் சென்ற சிப்பாய் ஒரு பையனை பிடித்து கண்டித்து பள்ளிவாசல் நிர்வாகத்திடம் நிலைமையை சொல்லி கண்டித்துள்ளார்.பின்னர் ஒரு நிர்வாகி தேவாலயத்திற்கு வந்து பாதரிடம் வருத்தம் தெரிவித்ததை கண்டேன்...
சிப்பாய் பின்னர் என்னை வீதியோரம் கண்டபோது தான் பொறுமையாக நடந்து கொண்டதாகவும் அந்த சிறார்களின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை என்றும் கூறி கவலைப்பட்டார்...
“ ஆராதனை நடக்கும் நேரம் இப்படிச் செய்வது சரியில்லை தானே...” என்றும் அவர் குறிப்பிட்டார்...
“எப்படியோ இனி இப்படி நடக்காது என்று நினைக்கிறேன்..” என்று கூறியபடி நானும் வீடு சென்றேன்...
இது ஒரு சாதாரண நிகழ்வல்ல...
ஒரு பெரிய களேபரம் இராணுவச் சிப்பாயின் அந்த பொறுமையால் தவிர்க்கப்பட்டதாக நான் உணர்கிறேன்...
பெற்றோர்களே பிள்ளைகளை பற்றி கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்...
வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா? சிந்தியுங்கள்.. !
- சிவராஜா ராமசாமி
Comments
Post a comment