BREAKING NEWS

கொழும்பு ஸாகிராவின் புதிய கல்விச் சாதனையும் எதிர்கால நகர்வும்.


கொழும்பு பல்கலைக் கழகத்தில் பணி புரிந்த காலம்தொட்டு சுமார் 15 வருடங்கள் கொழும்பில் வசித்து வந்தவன் என்ற அடிப்படையிலும், கொழும்பு மத்திய பகுதி வை. எம். எம். ஏ. தலைவராக நீண்ட காலம் தொண்டாற்றியவன் என்ற அடிப்படையிலும், இயல்பாகவே இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சகல துறைகளிலுமான நேரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பொது நோக்கு கொண்ட ஒருவன் என்ற அடிப்படையிலும் கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையில் பாரிய அக்கறை ஒன்று எனக்குள் இருந்து வருகிறது.

எனது பார்வையில் இலங்கை முஸ்லிம்களோடு ஒப்பிடிகின்ற பொழுது ஆழுமை, துணிச்சல், சுறுசுறுப்பு, கூட்டுவாழ்கை மற்றும் பகிர்ந்துண்ணல் போன்ற விடயங்ககளில் கொழும்பு முஸ்லிம்களுக்கு சில தனிச்சிறப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் கல்வி மேம்பாடு மற்றும் வீட்டு வசதி போன்ற விடயங்களில் அவர்கள் மிகவும் பின்தங்கிய ஒரு நிலையிலேயே காணப்படுவது கவலையழிக்கின்றது.

இந்த நிலையை நிவர்த்தி செய்யவென்று அங்கு தலைமை வகிக்கின்ற அரசியல் மார்க்க மற்றும் கல்விசார் தலைமைகள் போதியளவு கரிசனை காட்டவில்லை என்றே நான் கருதுகின்றேன். (மிகச்சிலரைத் தவிர).

எது எவ்வாறு இருப்பினும் இலங்கை முஸ்லிம் தேசியதின் அச்சாணியாக விளங்கும் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி மேம்பாடானது இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் வழமாகவும் வலிமையாகவுமே நான் பார்க்கிறேன்.

அந்த வகையில் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி மற்றும் வீட்டு வசதிகள் போன்றவற்றில் விசேட அவசர கரிசனை காட்டப்பட வேண்டும் என்பதும் அதன் பின்னடைவுகளுக்கு அந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் தலைமைகள் திட்டமிட்ட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற உண்மைக்கு மத்தியில் அண்மைக்காலமாக அப்பிராந்திய முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக கொழும்பு ஸாகிரா ஆற்றி வருகின்ற பங்கு குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று.

அதனை நிரூபிக்கும் வகையில் இந்த வருட உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்துள்ள ஸாகிரா கல்லூரியையும் அதன் அதிபர் மற்றும் அதற்கு பின்னின்றோரையும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அதையும் தாண்டி இன்னுமொரு படி மேலே சென்று சிந்திப்போமானால், மர்ஹூம் ஏ.எம். வாப்பிச்சி மரைக்கார் அவர்களால் மர்ஹூம் ஐ. எல். எம். அப்துல் அஸீஸ் மற்றும் கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் அறிஞர் எம். சி. சித்திலெப்பை அவர்களின் அயராத முயற்சியாலும் அன்றைய காலத்தில் எகிப்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு இலங்கையில் வாழ்ந்துவந்த மர்ஹூம் அகமது ஒறாபி பாஷா அவர்களின் நிதி உதவியோடும் 1892 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, நாட்டின் தலைநகரின் மைய்யதில் தாராளமான நில வழத்தோடு காணப்படுகின்ற இன்றைய கொழும்பு ஸாகிராக் கல்லூரியானது, தனது கல்வி மேம்படுத்தலோடு மட்டும் நின்றுவிடாது வெற்றிடமாக மாறிவரும் முஸ்லிம் ஆழுமைகளையும் ஆக்கபூர்வமான அரசியல் மற்றும் கல்விசார் தலைமைகளையும் உருவாக்க வேண்டும் என்பதும், அதன் மூலம் எமது சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு, கௌரவம் மற்றும் அபிவிருத்தி அபிலாசைகள் தொடர்பில் எம்மை எதிர்நோக்கியுள்ள சமகால சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதும் எனது ஆசையும் அவாவுமாகும்.

அதற்காக பிரார்த்திபோம்.
இன்ஷா அல்லாஹ்.


▪︎ Kaleelur Rahuman

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar