சுமார் நாலாயிரம் சிங்களத் தாய்மார்கள் கருவுறாமல் இருக்கும் வகையில் மகப்பேறு சிகிச்சைகளை மேற்கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்ட குருநாகல் மருத்துவமனை டாக்டர் மொஹமட் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (12) விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே பெறப்பட்ட சாட்சியங்களை மீண்டும் பெறுமாறும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சிஐடி காவலில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட போதும் டாக்டர் ஷாபிக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.
Post a Comment