அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கை பிரதிநிதி கல்முனையைச்சேர்ந்த ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கும் முக்கிய பதவி
ஜெனீவாவில் நான்கு நாள் அமர்வை நேற்று (09.12) நிறைவு செய்துள்ள உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனத்திற்கான அரச தரப்பினர்களின் கூட்டத்தின் போது (MSP), 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக இலங்கை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வெளிச்செல்லும் தலைவரான பிரான்சின் தூதுவர் யன் ஹ்வாங்கிடமிருந்து, 2020 அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கின்றார்.
இந்த மாநாடு நடைமுறைக்கு வந்து, அடுத்த ஆண்டு 45 ஆண்டுகளைக் குறித்து நிற்பதனாலும், 2021 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஒன்பதாவது மீளாய்வு மாநாட்டை நோக்கி தொடர்ச்சியான நிபுணர் கூட்டங்கள் மற்றும் ஆயத்தக் கூட்டங்களைக் கட்டமைப்பதற்காக 2020 ஆம் ஆண்டு முழுவதும் அரச தரப்பினர்கள் ஒன்று கூடுவதனாலும், உலகளாவியமயமாக்கல் மற்றும் தேசிய நடைமுறைப்படுத்தலில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதோடு அதன் நோக்கங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உதவியை வலுப்படுத்த இலங்கையின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.
உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனம் (BWC) என பிரபலமாக அறியப்படும் பக்டீரியாவியல் (உயிரியல்) மற்றும் நச்சு ஆயுதங்களின் அபிவிருத்தி, உற்பத்தி மற்றும் கையிருப்பு ஆகியவற்றை தடுப்பதற்கான சாசனம் உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்களை அவற்றின் முழு சுழற்சியின் மூலமும் தடைசெய்வதுடன், இது பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பெருக்கத்தை தடுப்பதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் மற்றும் பெருகிவரும் நிலையற்ற உலகளாவிய சூழலில் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரச தரப்பினர்களின் முயற்சிகள் ஆகியவற்றின் ஒரு முக்கிய அங்கமாகும்.
-வெளிநாட்டு உறவுகள் அமைச்சு.
கொழும்பு.
Comments
Post a comment