எல்லோரும் ஒற்றுமையாகவும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.- பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜயவிக்கிரம

(எம்.என்.எம்.அப்ராஸ்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாய்ந்தமருதுக்கான மகளிர் பிரிவுகள் அங்குராப்பணமும் மக்கள் சந்திப்புகல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதான அமைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி
யூஎம்.நிசார்  நெறிப்படுத்தலில் 
லீஸா சமுதாய மகளிர்  அமைப்பின் தலைவி என்.எம்.மறினா தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.இதன் போது கலந்து கொண்ட முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜஙக அமைச்சரும்,
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவியுமான பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜயவிக்கிரம
உரையாற்றுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.மேலும் அவர் அங்கு
உரையாற்றகையில்
இப் பிரதேசத்தில் உங்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கோள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அபிவிருத்தி திட்டங்களைமேற்கொள்ள என்னை அபிவிருத்தி குழு தலைவியாக நியமித்துள்ளனர் .இதன் மூலம் இங்குள்ள சகல இனமக்களுக்கும் சேவை செய்ய முடியும் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒருமித்து ஒற்றுமையாகவும்சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் .

நாட்டில் பெண்கள் எங்களுடன் இணைத்து பல வேலைத்திட்டங்களில் இணைந்து செயலாற்றுகின்றனர்

கோடடாபய ராஜபக்ஷ
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாட்டின் பல நல்ல வேலைத்திட்டங்ககளை மேற்கொண்டுவருகின்றார்எமது பிள்ளைகள் நாட்டில் நற் பிரஜயையாக உருவாக்க பொருத்தமான கொள்கை திட்டத்தைஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார்இவரின் தலைமைத்துவம் மூலம் நாடு அபிவிருத்தி அடையும் அதுமட்டுமல்ல இதன் மூலம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ முடியும் என்றார்.

இதன் போது கலந்து கொண்ட பெண்கள் தங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்