விமான நிலையம் செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் - திருத்தப் பணிகள் காரணமாக வீதியை மூடுவதற்கு நடவடிக்கை

ஆடியம்பலம பிரதேசத்தில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையான வீதியின் ஒரு மருங்கு தற்காலிகமான மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 07 ஆம் திகதி மாலை 06 மணியிலிருந்து 08 ஆம் திகதி நள்ளிரவு வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்துக்கு செல்லும் மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையால் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக குறித்த வீதியை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

popular posts

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா