"காந்தா சவிய" (மகளிர் சக்தி) யின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
Posted by aljazeeralanka.com on December 25, 2019 in | Comments : 0
"காந்தா சவிய" (மகளிர் சக்தி) யின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை
( மினுவாங்கொடை நிருபர் )
கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் குடும்பங்களின் துயர் போக்கும் தூய நோக்கில் செயற்படும் "காந்தா சவிய" (மகளிர் சக்தி) அமைப்பு, இம்முறையும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கவுள்ளது.
இந்த அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வு, எதிர்வரும் (28) சனிக்கிழமை மாலை, கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் "காந்தா சவிய" அமைப்பு, வறிய மக்கள் துயர் துடைக்கும் தூய பணியை சுமார் இருபது வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது.
மேலும், இவ்வமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் இன, மதம் பாராது சகல இனத்தவரதும் வாழ்வுக்குக் கைகொடுத்து கரம் நீட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment