அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
இலங்கை முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி அவசியமா?
இந்தக்கேள்விக்குரிய பதிலை நாம் காணப்புகுமுன் இலங்கை முஸ்லிம்களின் வாழ்விடங்களை முதலில் ஆராய வேண்டும்.
இந்த வகையில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் பெருவாரியாக வாழ்கின்றனர். சுமார் 60 வீதமான முஸ்லிம்கள் வடக்கு கிழக்குக்கு வெளியே அடர்த்தியின்றி தொட்டம் தொட்டமாக சிங்கள மக்களுடன் வாழ்கிறார்கள் என்ற யதார்த்தத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் இலங்கை முஸ்லிம்களின் பொதுவான தேவை என்ன? மாகாணங்களின் வேறுபாட்டால் தேவைப்படும் தேவைகள் என்ன? இவை அனைத்தும் ஒரே மாதிரியானவையா என்பவற்றையும் நாம் பார்க்க வேண்டும்.
அவ்வாறு பார்க்கும் போது இலங்கை முஸ்லிம்களை வடக்கு கிழக்கில் தமிழர்களுடன் வாழ்வோர் என்றும் அவற்றுக்கு வெளியே சிங்கள மக்களுடன் வாழ்வோர் அதாவது தென்னிலங்கை முஸ்லிம்கள் என்றும் பிரித்தே இதனை ஆராய வேண்டியுள்ளது.
பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தாம் வாழும் பகுதி மக்களுடன் இன ஐக்கியத்துடனேயே வாழ்ந்தனர். தென்னிலங்கை முஸ்லிம்கள் எப்போதாவது சிங்கள முஸ்லிம் கலவரத்துக்கு முகம் கொடுப்பதும் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம் கலவரத்துக்கும் சிறிய அளவில் முகம் கொடுத்தனர்.
இவ்வாறான சூழ் நிலையில் தமிழ் மக்களுக்கென தனியான கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போது கிழக்கு முஸ்லிம்கள் சிலர் அதில் தாமும் தமிழ் பேசுவோர் என்ற ரீதியில் இணைந்தனர். தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள கட்சிகளுடனேயே தம் அரசியலை முன்னெடுத்தனர்.
பின்னர் தமிழர் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு சமவுரிமை கிடைக்காமை காரணமாக இதற்கான தீர்வை கிழக்கு முஸ்லிம் தேடிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் 75களுக்கு பின் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுத ரீதியிலான போராட்ட சிந்தனை உருவாகியதைக்கண்ட முஸ்லிம் சமூகம் அதனை நல்ல கண் கொண்டே பார்த்தது. 80களில் அவற்றுடனும் சிலர் இணைந்தனர். ஆனாலும் முஸ்லிம் சமூகம் தமிழ் ஆயுத இயக்கங்கள் முஸ்லிம்களை கப்பம் கட்டும் அடிமைகள் போன்று பார்த்ததனால் அதிலும் முஸ்லிம்கள் விரக்தியுற்றனர். சில முஸ்லிம்கள் தமிழ் ஆயுத இயக்கங்களால் கப்பம், கடத்தல் என்பவற்றுக்கு முகம் கொடுத்ததால் தனியான முஸ்லிம் கட்சியின் தேவை பற்றி முஸ்லிம் சமூகம் குறிப்பாக கிழக்கு சமூகம் சிந்தித்தது. இதன் எதிரொலியாகவே 1981ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் உருவாக்கம் ஆரம்பித்தது.
அக்கட்சியை ஆரம்பித்தது முதல் அதன் ஸ்தாபக சிந்தனையாளரான எம் எச் எம் அஷ்ரப் தமிழ் ஆயுத குழுக்களின் அச்சுறுத்தலுக்குள்ளானார். ஏன் தமிழ் ஆயுத குழுக்கள் முஸ்லிம் தனித்துவ கட்சியை தடை செய்ய வேண்டும்?, ஏன் தனித்துவ கட்சியை பார்த்து பார்த்து பயப்படுகிறார்கள் என்பதை முஸ்லிம் இளைஞர்கள் சிந்தித்தனர். இதன் விளைவாக ஒரு உண்மையை கண்டனர். அதாவது தனித்துவ கட்சி மூலம் முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை காத்து தம் உரிமைகளை வெல்ல முடியும் என்பதனாலேயே இத்தடைகள் வருகின்றன என்பதை முஸ்லிம் இளைஞர்கள் கண்டதால் முஸ்லிம் காங்கிரசுக்கான ஆதரவு கூடியது.
இந்த வகையில் முஸ்லிம் தனித்துவக்கட்சி வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு அவசியம் என்பதை புரிய முடியும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது முதல் அது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்று 1994ம் ஆண்டு அமைச்சு பதவியை பெறும் வரை முஸ்லிம்களின் தனித்துவ கட்சியாகவே இருந்தது. முஸ்லிம் என்ற பெயரில் இருந்ததால் அக்கட்சியை நல்லதொரு வரமாக வடக்கு கிழக்குக்கு வெளியே முஸ்லிம்களில் சிலர் பார்த்தனர். ஆனாலும் இது முஸ்லிம் சிங்கள இனவாதத்தை உருவாக்கும் என்ற குரல்களும் தென்னிலங்கையில் எதிரொலித்தது. அதிலும் நியாயம் இருந்ததை இப்போது உணர முடிகிறது.
1994ம் ஆண்டுக்கு பின் முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களின் உரிமைக்குரல் என்றதிலிருந்து முஸ்லிம்கள் சிலரின் உழைக்கும் கட்சியாக மாறியது. இது விடயத்தில் தலைவர் அஷ்ரப் கவனமாக இருந்த போதும் அக்கட்சியை சேர்ந்த அனைவருமே எதை சுருட்டலாம் என்று அலைந்ததையே காண முடிந்தது.
தலைவர் அமைச்சராகவும் நல்ல மனிதராகவும் இருந்த காரணத்தால் சிங்கள மக்களின் ஆதரவுத்தளமும் கூடியதால் தனித்துவ கட்சியை கலைத்து நுஆ கட்சியை ஆரம்பித்தால் பாராளுமன்றில் மிகப்பலமுள்ள கட்சியாக இருக்கலாம் என கனவு கண்டார். அவரது கனவை நானும் சரி கண்டதால் நுஆ கட்சியின் அங்கத்துவத்தை 1999ம் ஆண்டு பெற்றுக்கொண்டேன். இருந்தும் தலைவரின் மறைவு அனைத்தையும் கனவாக்கி விட்டது.
பின்னர் ரவூப் ஹக்கீம் தலைமை பதவியை எடுத்த போது முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக மாறும் என என்னைப்போன்றோர் நினைத்தனர். ஹக்கீமை அஷ்ரபின் வாரிசாக எதிர் பார்த்து கவிதையும் படித்தேன். ஆனால் 2001ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு ஹக்கீம் கலந்து கொள்ள சென்ற போது முஸ்லிம் தனித்தரப்பாக செல்லாமல் அரச தரப்பாக சென்ற போது முஸ்லிம் தனித்துவக்கட்சி மரணித்து விட்டது.
2001ம் ஆண்டு ஹக்கீம் முஸ்லிம் தனித்தர்ப்பாக சென்றிருந்தால் அதுவே முஸ்லிம் தனித்துவக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் பெரு வெற்றியாக இருந்திருக்கும். ஏனெனில் 87ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது முஸ்லிம் சமூகம் கணக்கில் எடுக்கப்படாமை காரணமே முஸ்லிம் தனித்துவ கட்சியை முஸ்லிம்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னெடுத்தமைக்கான முக்கிய காரணமாகும்.
ஆனால் 2001ம் ஆண்டு முஸ்லிம் தனித்துவ கட்சியின் இலக்கு ஹக்கீமால் காட்டிக்கொடுக்கப்பட்டது. அது முதல் அக்கட்சி முஸ்லிம் தனித்துவ கட்சியாக இன்றி ஏதாவதொரு கட்சியின் வைப்பாட்டியாகவே இருந்து வருகிறது.
2001ம் ஆண்டுக்குப்பின் அக்கட்சியின் நடவடிக்கைகளினால் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய இனவாதம் உருவாகியது என்பது உண்மையாகும். முஸ்லிம் காங்க்ரஸ் நினைத்தால் ஆட்சியை கலைக்கும் ஆட்சியை உருவாக்கும் என அக்கட்சியை சேர்ந்தோர் பகிரங்கமாக கூறத்தொடங்கியதன் விளைவே ஹெல உறுமய என்ற இனவாத கட்சிகள் உருவாகின.
அஷ்ரப் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சிங்கள மக்களுக்கெதிராக பெரும்பாலும் சாடிப்பேசியதில்லை. சிங்கள அரசியல் கட்சிகளுக்கெதிராக பேசினாலும் மிகவும் நிதானமாக நடந்து கொண்டார். அத்துடன் சிங்கள மக்களின் பெரும்பான்மைத்தளம் எக்கட்சி பக்கம் இருக்கிறதோ அப்பக்கத்துக்கு சார்பாக நடந்து கொண்டார். ஆனால் ஹக்கீம் தலைமை தாங்கியது முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவே நடந்து கொண்டமை சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் இனவாத உந்துதல்களுக்கு காரணமாகும்.
அத்துடன் வடக்கு கிழக்குக்கு வெளியே குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இல்லாத பகுதிகளில் முஸ்லிம் காங்கிரசை சந்தைப்படுத்தியமை பாரிய தவறாகும். இதனை 8 வருடங்களுக்கு முன்பும் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்டுள்ளேன். நாங்கள் முஸ்லிம்கள் எவ்வளவு உதவி செய்தாலும் அவர்கள் முஸ்லிம்களின் கட்சிக்கு அல்லது முஸ்லிம் கட்சிகள் சொல்கின்றவருக்கே ஓட்டு போடுவார்கள் என்ற நிலையை கண்டதால் முஸ்லிம்கள் நன்றாக அடி வாங்கட்டும் நாம் பார்த்துக்கொண்டிருப்போம் என்ற நிலை ஏற்பட்டது. இப்படியான இனவாத நிலைக்கு முஸ்லிம் காங்கிரசின் பிழையான நடவடிக்கைகள் வழி வகுத்தது.
இறுதியில் முஸ்லிம் அமைச்சர்கள் தலைமகளின் முஸ்லிம் கட்சிகளின் உதவியின்றி சிங்கள மக்களில் மிகப்பெரும்பாலோர் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.
இவை அனைத்தையும் பார்க்கும் போது இதுவரையான முஸ்லிம் தனித்துவ அரசியல் தோல்வியுற்று முஸ்லிம்களுக்கு பாதகமான ஒன்றாகவே மாறிவிட்டது என்பதே உண்மை. வடக்கு கிழக்குக்கு வெளியே மட்டுமல்ல அங்கும் கூட இப்போதைய முஸ்லிம் தனித்துவக்கட்சியான முஸ்லிம் காங்கிரசை நிராகரித்து உலமாக்கள் தலைமையிலான தனித்துவ கட்சியை ஆதரிப்பதே எதிர்கால முஸ்லிம் சமூகத்துக்கு சிறந்ததாகும். காரணம் உலமா கட்சி என்பது பணம், பதவிகளுக்கு அப்பால் முஸ்லிம்களின் குரலாகவும் உண்மை, நேர்மையான அரசியலை காட்ட வேண்டும் என்ற குறிக்கோளில் கொஞ்சம் கூட தடுமாற்றமில்லாது பயணிக்கிறது.
Comments
Post a comment