மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் பலியாகியுள்ளார்.


22 வயதான அதே பகுதியை சேர்ந்த குறிதத் இளைஞன் இன்று (01)  காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அரசி ஆலையின் ஒரு பகுதியில் காணப்பட்ட வெள்ள நீரினை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


மயக்கமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.