இலங்கைக்கு 25 மில்லியன் டொலர் கடன் உதவி வழங்க உலக வங்கி அனுமதி

இலங்கை அரசாங்கத்துக்கு 25 மில்லியன் டொலர் கடன் உதவி வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கடன் அரசாங்கத்தின் பிரதான மற்றும் அரச நிதிமுகாமைத்துவ நடவடிக்கைகளின் வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த இக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடனானது, அரசாங்க துறைகளின் செயல்திறனை வலுப்படுத்தும் திட்டம் நிதி அமைச்சின் நிறுவன திறனை வலுப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், சிறந்த சேவைகளை வழங்கவும் உதவும் என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. 

தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் அதிக மனித வள திறன் வாய்ப்புகள் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய உக்கிகளாக இருக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது.

இந்த கடன் 28 வருட மீள் செலுத்தும் காலத்தை கொண்டுள்ளதுடன் 11 வருட சலுகை காலத்தை கொண்டுள்ளது.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !