BREAKING NEWS

மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2014ல் அங்கிகரிக்கப்பட்ட கெசட்டை வைத்து கல்முனையை அபிவிருத்தி செய்வோம்.


1960 களை நோக்கி நகர்த்தப்படும் கிழக்கின் முஸ்லிம் அரசியல்.
+++++++++++++++++++

1960 களுக்கு முன் நமது கிழக்கு மக்கள் மீன்பிடி, விவாசாயம், பண்ணை வேளாண்மை, வியாபாரம் என பிரசித்தி பெற்று தானும், தன்பாடும் என நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

அக்கால அரசில் காலங்களில் கொழும்பை சேர்ந்த சேர் றாசிக் பரீட், மாகான் மாகார் போன்றவர்கள் நமது கிழக்கிற்கு வந்து நமது வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்று பாராளும்ன்ற பிரதிநிதி ஆனார்கள்.

அது கல்வி வளர்ச்சி, அரசியலறிவு மங்கியகாலம் அக்காலத்தில் அந்த பிரதி நிதிகளும் நேர்மை யானவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும்,  நமது மக்கசளது அறியாமையை சாதகமாக்கி நம்மகவர்களை ஏமாற்றாது சமுக உணர்வு உள்ளவர்களாகவும் இருந்தனர்.

அதன்பின் கிழக்கிலிருந்து கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர், முதலியார் சின்ன லெப்பை போன்றவர்களும் இன்னும் பலரும் நமது பிரதிநிதிகளாக இருந்து சேவை செய்தனர்.

விசேடமாக எம்.எஸ்.காரியப்பர் அவரது காலம் கிழக்கு முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு பொற்காலமாகும்.

அக்காலத்தில் சகல காரியாலயங்களும் தமிழ் அதிகாரிகளால் குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களால் நிரம்பி இருந்தது. அந்த அதிகாரிகளதும், தமிழ் அரசியல்வாதிகளதும் கழுத்தறுப்புகள், இருட்டடிப்புகள் சகலதையும் தனது மொழியறிவு, வாதத்திறன், சமயோசிதம், வரலாற்றுத் தேர்ச்சி, மார்க்கப்பற்று ஆகிய முழுமையான ஆளுமை மூலம் எதிர்து நின்று சாதித்து மகானாக திகழ்ந்தார்.

அதன்பின் பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை, மட்டக்களப்பு, மூதூர் தொகுதிகளின் பிரதிநிதிகளாக கிழ்கில் அந்த அந்த தொகுதிகளில், மாவட்டங்களில் பிறந்து வாழ்ந்தவர்களே சிறிலங்கா சுதந்திரகட்சி, ஜ.தே.க. ஆகிய பேரினக்கட்சிகளில் ஆழும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருந்து சேவை செய்தும், குரல் கொடுத்தும் வந்தார்கள்.

1985க்கு பிற்பட்ட தமிழ் பயங்கரவாதம் கிழக்கு முஸ்லிம்கள்மீது மேற்கொண்ட படுகொலைகள், ஆள்க்கடத்தல், கப்பம் ஆகியவைகளால் பாதுகாப்பற்ற சமுகமாக ஆக்கப்பட்டார்கள்.

அக்கால கட்டத்தில் அரசாலும், சர்வதேசத்தாலும் எற்படுத்தப்பட்ட தேசியப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனிச்சமுகமாக ஏற்றுக்கொள்ளாமை ஆகிய காரணங்களால் காலத்தின் தேவையாக முஸ்லிம் அரசியல் கட்சியின் தேவை உணரப்பட்டது. அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அஷ்ரப் உருவாக்கினார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் ஒண்றுபட்ட ஆதரவால் பேரினக்கட்சிகள் புறந்தள்ளப்பட்டு,  தமிழ் பயங்கரவாதிகளால் சல்லடையாக்கப்பட்ட கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவமான அஷ்ரப் எனும்  குரல் 1989 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றில் ஒலித்தது.

கிழக்கு முஸ்லிம்களின் கிழக்கு தலைமை தனது ஊராகிய கல்முனை நகரை அபிவிருத்தி செய்யும் பாரிய திட்டத்துன் தனது எதிர்காலத்தை திட்டமிட்ட நிலையில் அஷ்ரப்  அகால மரணத்தை தழுவினார்.

அஷ்ரபின் மறைவை தொடர்ந்து கட்சியின் தலைமை யாருக்கு எனும் போட்டா போட்டி உருவானது.

பேரியல் அஷ்ரப் தலைவியானால் அக்கரைப்பற்றில் சேகுஇஸ்ஸத்தினின் கை ஓங்கிவிடும் எனும் தனிமனித குரோதத்தால் தனது நப்ஷி கேட்பதாக இஸ்லாத்திற்கு முரணாக ஆசைப்பட்ட சொநத ஊர் எந்த ஊர் என்று தெரியாத பரதேசி ஹகீமுக்கு அதாவுல்லா, ஹரீஸ் போன்றவர்கள் சாய்ந்த மருது பள்ளிவாயல் முன்றலில்வைத்து அஷ்ரபின் மனைவியை அவமானப்படுத்தி ஹகீமை தலைவானாக்கினார்கள்.
தலைமைத்துவத்தை ஏற்ற ஹகீம், தனது உயிரையே அதறப் பதற அர்ப்பணித்து கட்சியை தந்துவிட்டுப்போன நன்றிக்கடனுக்காக. தலைவர் அஷ்ரப் இறுதியாக அசைப்பட்ட கல்முனை நகர அபிவிருத்தியை முதலாவதாக செய்து அஷ்ரபின் ஆத்மாவை சாந்தியடைய செய்திருக்க வேண்டும்.

கல்முனையை ஒரு கையாலாகாத பிரதிநிதியிடம் ஒப்படைதது அவமானப் படுத்தியது மட்டுமல்லாது அஷ்ரபால் ஒற்றுமையாக்கப்பட்ட கல்முனைத் தொகுயை தேவையற்ற மேயர்பிரச்சினையை உருவாக்கி கல்முனயையும், சாய்ந்தமருதையும் செயற்கையாக பகமையாக்கினார்.

அக்குறணை மார்கட்டை கட்டி அழகுபார்த்தவர் கல்முனை மார்கட்டுக்கு கதையால வடை சுட்டார்.

தலைவரின் ஊரை பாழ்போட்டார். ஒரு வீதிக்கு ( கடற்கரை பள்ளி வீதி ) பெயர் வைக்க வக்கில்லாத முதலமைச்சருக்காக AMH க்கு வந்த " விபத்து சேவை கட்டிடத்தை" கல்முனை வைத்தியசாலைக்கு தாரைவார்த்தார்.

இவைகளைவிட முக்கியவிடயம் -

இப்பதிவின் கீழ் பிரசுரமாகி உள்ளது.

அதாவது, 2014.06.23 ஆம் திகதிய 1868/8 ஆம் இலக்க கெசட் மூலம் கல்முனை மாநகர அபிவிருத்தி திட்டத்தை அப்போதய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவா மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கிருந்துள்ளார். அக்காலத்தில் ஹகீம் அதே அமைச்சரவையில் நீதி அமைச்சராக இருந்துள்ளார். தலைவர் அஷ்ரபின் ஊராகிய கல்முனையை அபிவிருத்தி செய்ய கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை துரோகி ஹகீம் தூக்கி வீசி விட்டான்.

மகிந்தயின் ஆட்சியை மடத்தனமாக தோற்கடித்துவிட்டு நல்லாட்சியில் அதே நகர அபிவிருத்தி அமைச்சை அலங்கரித்த ஹகீமுக்கு அந்த கெசட்டை எடுத்து பார்த்து அஷ்ரபின் கல்முனையை அபிவிருத்தி செய்ய கண் கெட்டுப் போயிட்டா? துரோகி.

நாலரை வருட ஆட்சியில் சுமேந்திரன் போன்ற  டயஸ்போறா தமிழனுடன் சேர்ந்து கல்முனையை தமிழனுக்கு தாரைவார்க்க துணிந்த மூதேசி, அந்த ஆட்சிக்காலத்தில அந்த கெசட்டை வைத்து கல்முனையை அபிவிருத்தி செய்ய தெரியாத கல்முனை பிரதிநிதியான கழுதையோடு சேர்ந்து கல்முனையை நாசம் செய்து அஷ்ரபுக்கு அவர்கண்ட கல்முனையை அபிவிருத்தி செய்யும் கனவை நனவாக்காத துரோகிகளே!  ரோசம் மானம் இருந்தால் மீண்டுமொருமுறை வாக்குக் கேட்டு வாருவீர்களா?

கல்முனை வாழ் போராளிகளே!

இந்த கயவர்களுக்குத்தான் வெட்கம் சுடு சுறணை இல்லை என்றால் உங்களுக்குமா இல்லை.

கிழக்கானை மழுங்கடிக்கும் துரோகிகளை துரத்தியடித்து பெரும்பான்மை சமுகத்தோடு கைகோர்த்து கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2014ல் அங்கிகரிக்கப்பட்ட கெசட்டை வைத்து  கல்முனையை அபிவிருத்தி செய்வோம்.

குறிப்பு-

அறிவுள்ளவர்களுக்கும்,
உணர்வுள்ளவர்களுக்குமே எனது பதிவு  விளங்கும். அதை விளங்காத கூசாத்தூக்கிகள் அடக்கமாக இருப்பது புத்தி.

ஹாஜி நஸீர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar