ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
19 ஆம் திருத்தம் இல்லாமலாக்கப்பட்டால் ஆணைக்ககுழுக்கள் அனைத்தும் செயலிழந்துவிடும் அபாயம் - ஆசாத் சாலி
ஆட்சிக்குவரும் பிரதான கட்சிகள் இரண்டும் கடந்தகால அரசாங்கங்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாத்தே வந்திருக்கின்றது.
யாரையும் சிறைக்கு அனுப்பிய வரலாறு இல்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்ச பாராளுமன்றத்தை ஒரு மாதகாலத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்திருக்கின்றார். டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான கோப்குழுவின் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
என்றாலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால் கோப்குழுவின் விசாரணை அறிக்கை செல்லுபடியற்றதாக மாறியுள்ளது.
எனவே இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக மக்களின் பணம் வீண் விரயமாகுவதுடன் மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் ஏற்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
அத்துடன் 19 ஆம் திருத்தம் இல்லாமலாக்கப்பட்டால் ஆணைக்ககுழுக்கள் அனைத்தும் செயலிழந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
- எம் ஆர் எம். வசீம்
Comments
Post a comment