ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் அரசியல் இருந்து ஓய்வு?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் அரசியில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகினால் அவருடன் பல உறுப்பினர்களும் அரசியில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளனர்.
சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் செயற்பட விரும்பவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து சமகால தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர்கள் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போட்டியிடப் போவதில்லை எனவும், வர்த்தக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலைப்பாட்டில் கட்சியின் சேர்ந்த பல சிரேஷ்ட உறுப்பினர்களே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 50இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்