BREAKING NEWS

கல்முனை அல் அமீன் பாலர் பாடசாலை வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும்.

கல்முனை அல் அமீன் பாலர் பாடசாலை வருடாந்த  கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும்.
(கல்முனை ஜவ்சான்)

கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஜ.எம். மன்சூர் தலைமையில் இன்று(30) கல்முனை ஸாஹிரா கல்லுரி காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வின் கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் கெளரவ ஏ.எ.எம்.பைருஸ், ஸாஹிரா கல்லுரி அதிபர் ஜாபிர், மற்றும் இலங்கையின் எதிர்கால மாற்றத்துக்கான அமைப்பின் தலைவர் மே.மே.ஏ முபாறக் மற்றும் பல அதிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கொழும்பு ஸாகிராவின் புதிய கல்விச் சாதனையும் எதிர்கால நகர்வும்.


கொழும்பு பல்கலைக் கழகத்தில் பணி புரிந்த காலம்தொட்டு சுமார் 15 வருடங்கள் கொழும்பில் வசித்து வந்தவன் என்ற அடிப்படையிலும், கொழும்பு மத்திய பகுதி வை. எம். எம். ஏ. தலைவராக நீண்ட காலம் தொண்டாற்றியவன் என்ற அடிப்படையிலும், இயல்பாகவே இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சகல துறைகளிலுமான நேரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பொது நோக்கு கொண்ட ஒருவன் என்ற அடிப்படையிலும் கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையில் பாரிய அக்கறை ஒன்று எனக்குள் இருந்து வருகிறது.

எனது பார்வையில் இலங்கை முஸ்லிம்களோடு ஒப்பிடிகின்ற பொழுது ஆழுமை, துணிச்சல், சுறுசுறுப்பு, கூட்டுவாழ்கை மற்றும் பகிர்ந்துண்ணல் போன்ற விடயங்ககளில் கொழும்பு முஸ்லிம்களுக்கு சில தனிச்சிறப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் கல்வி மேம்பாடு மற்றும் வீட்டு வசதி போன்ற விடயங்களில் அவர்கள் மிகவும் பின்தங்கிய ஒரு நிலையிலேயே காணப்படுவது கவலையழிக்கின்றது.

இந்த நிலையை நிவர்த்தி செய்யவென்று அங்கு தலைமை வகிக்கின்ற அரசியல் மார்க்க மற்றும் கல்விசார் தலைமைகள் போதியளவு கரிசனை காட்டவில்லை என்றே நான் கருதுகின்றேன். (மிகச்சிலரைத் தவிர).

எது எவ்வாறு இருப்பினும் இலங்கை முஸ்லிம் தேசியதின் அச்சாணியாக விளங்கும் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி மேம்பாடானது இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் வழமாகவும் வலிமையாகவுமே நான் பார்க்கிறேன்.

அந்த வகையில் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி மற்றும் வீட்டு வசதிகள் போன்றவற்றில் விசேட அவசர கரிசனை காட்டப்பட வேண்டும் என்பதும் அதன் பின்னடைவுகளுக்கு அந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் தலைமைகள் திட்டமிட்ட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற உண்மைக்கு மத்தியில் அண்மைக்காலமாக அப்பிராந்திய முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக கொழும்பு ஸாகிரா ஆற்றி வருகின்ற பங்கு குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று.

அதனை நிரூபிக்கும் வகையில் இந்த வருட உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்துள்ள ஸாகிரா கல்லூரியையும் அதன் அதிபர் மற்றும் அதற்கு பின்னின்றோரையும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அதையும் தாண்டி இன்னுமொரு படி மேலே சென்று சிந்திப்போமானால், மர்ஹூம் ஏ.எம். வாப்பிச்சி மரைக்கார் அவர்களால் மர்ஹூம் ஐ. எல். எம். அப்துல் அஸீஸ் மற்றும் கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் அறிஞர் எம். சி. சித்திலெப்பை அவர்களின் அயராத முயற்சியாலும் அன்றைய காலத்தில் எகிப்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு இலங்கையில் வாழ்ந்துவந்த மர்ஹூம் அகமது ஒறாபி பாஷா அவர்களின் நிதி உதவியோடும் 1892 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, நாட்டின் தலைநகரின் மைய்யதில் தாராளமான நில வழத்தோடு காணப்படுகின்ற இன்றைய கொழும்பு ஸாகிராக் கல்லூரியானது, தனது கல்வி மேம்படுத்தலோடு மட்டும் நின்றுவிடாது வெற்றிடமாக மாறிவரும் முஸ்லிம் ஆழுமைகளையும் ஆக்கபூர்வமான அரசியல் மற்றும் கல்விசார் தலைமைகளையும் உருவாக்க வேண்டும் என்பதும், அதன் மூலம் எமது சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு, கௌரவம் மற்றும் அபிவிருத்தி அபிலாசைகள் தொடர்பில் எம்மை எதிர்நோக்கியுள்ள சமகால சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதும் எனது ஆசையும் அவாவுமாகும்.

அதற்காக பிரார்த்திபோம்.
இன்ஷா அல்லாஹ்.


▪︎ Kaleelur Rahuman

கல்முனை சன்ப்ரைட் இளைஞர் கழகத்தின் வருடாந்த கற்றல் உபகரனங்கள் வழங்கி வைப்பு

கல்முனை சன்ப்ரைட்  இளைஞர் கழகத்தின் வருடாந்த கற்றல் உபகரனங்கள் வழங்கள் 2020.

கல்முனை சன்ப்ரைட்  இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யபட்ட பெற்றோரை இழந்த மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற பாரிய சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்ளுக்காக பாடசாலை கற்றல் உபகரணங்கள்
இன்று ( 2019.12.29) ஆம் திகதி கழக உறுப்பினர்களால் வழங்கபட்டது.

நிருபர்: கல்முனை Jowzan
முஸ்லிம் சிறார்களே,, தேவாலயத்திற்கு அருகில் இப்படிச் செயற்படுவது நல்லதல்ல...!

கொழும்பு புதுக்கடை ,பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்குமிடையில் நான் வசித்து வருகிறேன்..

சுமார் 10 முதல் 12 வயதுள்ள சில முஸ்லிம் சிறார்கள் இந்த வீதிக்கருகில் எந்த காரணமும் இல்லாமல் ஏதோ ஒரு பொழுதுபோக்குக்காக பட்டாசு வெடித்து மகிழும் நிகழ்வு கடந்த பல மாதங்களாகவே இடம்பெற்று வந்தது..

சில வாரங்களுக்கு முன்னர் எனது காருக்கடியில் பட்டாசை அவர்கள் கொளுத்தியபோது அவர்களை நான் கடிந்து இப்படி செய்ய வேண்டாமென சொன்னேன்..எனது நண்பரான முதிய ஹாஹியார் ஒருவரும் அதனை ஏற்று என்னுடன் இணைந்து அவர்களை கண்டித்தார்.

இன்று -29- மீண்டும் அந்த சிறார்கள் பட்டாசு மற்றும் பம்பரம் என்று சுழலும் பட்டாசுகளை மாலை கருக்கும் நேரம் போட்டார்கள்... வீதியில் போவோர் வருவோர் அச்சப்படும் வகையில்... வீதியில் போகும் ஓட்டோக்கள் மீது பாயும் வகையில் அவை இருந்தன.

பண்டாரநாயக்க மாவத்தை தேவாலயத்தினருகே பட்டாசுகள் சென்றதால் மாலை ஆராதனை குழம்ப அங்கு காவலுக்கு நின்ற இராணுவச் சிப்பாய் சிறார்களை நிறுத்தும்படி சொல்லிக்கொண்டே அவர்களை விரட்டி ஓடினார்... இன்னுமொரு சிப்பாய் ரி 56 துப்பாக்கியுடன் ஓடினார்...

நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்... அன்று கண்டித்த ஹாஜியார் அப்போது அந்த இடத்திற்கு வந்து என்னை பார்த்தபடி நின்றார்... இருவரும் செய்வதறியாது நின்றோம்...

அவர்களை விரட்டிச் சென்ற சிப்பாய் ஒரு பையனை பிடித்து கண்டித்து பள்ளிவாசல் நிர்வாகத்திடம் நிலைமையை சொல்லி கண்டித்துள்ளார்.பின்னர் ஒரு நிர்வாகி தேவாலயத்திற்கு வந்து பாதரிடம் வருத்தம் தெரிவித்ததை கண்டேன்...

சிப்பாய் பின்னர் என்னை வீதியோரம் கண்டபோது தான் பொறுமையாக நடந்து கொண்டதாகவும் அந்த சிறார்களின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை என்றும் கூறி கவலைப்பட்டார்...

“ ஆராதனை நடக்கும் நேரம் இப்படிச் செய்வது சரியில்லை தானே...” என்றும் அவர் குறிப்பிட்டார்...

“எப்படியோ இனி இப்படி நடக்காது என்று நினைக்கிறேன்..” என்று கூறியபடி நானும் வீடு சென்றேன்...

இது ஒரு சாதாரண நிகழ்வல்ல...

ஒரு பெரிய களேபரம் இராணுவச் சிப்பாயின் அந்த பொறுமையால் தவிர்க்கப்பட்டதாக நான் உணர்கிறேன்...

பெற்றோர்களே பிள்ளைகளை பற்றி கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்...

வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா? சிந்தியுங்கள்.. !

- சிவராஜா ராமசாமி

ஹொரொவ்பொத்தான ரத்மல பிரேதசத்தைச்சேர்ந்த ரஹ்மானிய்யா இளைஞர் கழகத்தினால் வருட இறுதி கலைவிழா நடைபெற்றது

அஸீம் கிலாப்தீன்  

ஹொரொவ்பொத்தான ரத்மல பிரேதசத்தைச்சேர்ந்த ரஹ்மானிய்யா இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருட இறுதி கலை விழா ரத்மல விளையாட்டு மைதானத்தில் 2018.12.29 அன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டதோடு 2019 வருடத்தில் கல்வி, கலை துறைகளில் திறமைகளை வெளிக்காட்டியோருக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும்.

பாறுக் ஷிஹான்


கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் எமது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொது  மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை (29)  மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணியின் பெரியநீலாவணை இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நா.மிதுலன் தலைமையில் இடம்பெற்ற   மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அங்கு உரையாற்றிய அவர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும். ஜனாதிபதியை விரைவில் மீண்டும் சந்திப்பதாகவும்,புதிதாக உருவாக்கப்படவுள்ள  கல்முனை மத்தி கல்வி வலயம் தொடர்பாக   நாம் இந்த அரசாங்கத்தில் கேட்டு செய்துமுடிப்போம். எமக்கு பல நல்ல விடயங்களை செய்யக்கூடிய இந்த அரசாங்கத்திடம் இருந்து எமது தேவைகள் குறைகளை நிவர்த்தி செய்ய முடிந்தவரை பாடுபடுவேன்.

அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுசு புதுசாக ஏதோ கதைத்து மக்களை குழப்பி வருகின்றனர்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரனுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.கல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்ய நான் இனி விடமாட்டேன்.புதிய தலைமுறையை உருவாக்க அம்பாறையில் நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் இனியாவது எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்.காற்று போன சைக்கிளில் சென்ற உங்களுக்கு எம்மால் ஒரு போதும் மக்களால் ஏமாற்ற முடியாது என தெரிவித்தார்.

இதில் தமிழர்  ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர், கொள்கை பரப்பு செயலாளர், முன்னாள் போராளிகள் மற்றும் மக்கள் நலன் பேணல் பொறுப்பாளர் வரதா அவர்களுடன், பெரியநீலாவணை மஹாவிஷ்ணு ஆலய பிரதம குரு நிரோஜசர்மா, மற்றும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளான ஜெகநாதன், வரதராஜன் ஆகியோரும் பெருமளவான இளைஞர்களும், பொதுமக்களும் பங்குபற்றியிருந்தனர்.

கலந்துரையாடலை தொடர்ந்து பெரியநீலாவணை தமிழ் பிரிவுக்கானதும் பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மைதானத்திற்குமான காணி தனியாரால் சுவிகரிக்கப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்ட்டதையடுத்து குறித்த காணியையும் சென்று பார்வையிட்டதுடன், பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களையும் நேரில் சென்று சந்தித்து குறைகள், தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவது குறித்து அரசாங்கம் இதுவரை முடிவெடுக்கவில்லை.

சுதந்திர தினத்தின் போது தேசியக் கீதத்தை சிங்கள மொழியில்
 மாத்திரம் பாடுவது குறித்து அரசாங்கம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லையென, அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்

கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இராணுவ படையினர் இன்று சிரமதானத்தில் ஈடுபட்டனர்

கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இராணுவ படையினர் இன்று 29.12.2019 சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

இந்த சிரமதானத்தில் கல்முனையைச்சேர்ந்த வாலிபர்களும் ஈடுபட்டிருந்தனர்.  சிரமதானத்தில் ஈடுபட்ட அனைத்து சகோதர்களுக்கும் வாழ்த்துக்கள்.

- கல்முனை ஜவ்சான்


கல்முனை இளம்பட்டதாரிகள் அமைப்பினால் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு
(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில் (Kalmunai Undergraduate Association) கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் வசதி குறைந்த தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கடந்த புதன்,வியாழன் ஆகிய இரு தினங்களில்
(25,26-12-2019)மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான பூரண அனுசரணையும் கல்முனைக்கான வளைகுடா அமைப்பினால் (Gulf Federation for Kalmunai - GFK) வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.இதன் மூலம் பல மாணவர்கள் பயனடைந்ததாக அமைப்பின் தலைவர் ஏ.எம்.எம்.முர்சித்
தெரிவித்தார்.

கல்முனை இளம்பட்டதாரிகள் அமைப்பினால் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில்  (Kalmunai Undergraduate Association) கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் வசதி குறைந்த தெரிவு செய்யப்பட்ட  51 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கடந்த 2019.12.25 &26 ம் திகதிகளில் வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான பூரண அனுசரணையும் கல்முனைக்கான வளைகுடா அமயத்தினால் (Gulf Federation for Kalmunai - GFK) வழங்கப்பட்டது.

இதன் மூலம் பல மாணவர்கள் நன்மையடைந்ததாக அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.


விஹாரை ஒன்­றி­லி­ருந்த மன்னர் காலத்து விலை­ம­திப்­பற்ற கஜ­முத்­துக்களை திருடிய பௌத்­த ­பிக்கு உட்பட 5 பேர் கைது.

மாத்­தளை நாவுல பிர­தேச விஹாரை ஒன்­றி­லி­ருந்த மன்னர் காலத்து விலை­ம­திப்­பற்ற கஜ­முத்­துக்கள் 
இரண்டைத் திருடி விற்­பனை செய்ய முயற்­சித்த பௌத்­த ­பிக்கு ஒருவர் உட்­பட ஐவரைக் கம்­பளை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ளனர்.

அதி­ர­டிப்­படை பிரிவின் உளவுப் பிரி­வுக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சியத் தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு கம்­பளை ஹெட்­காலை பிர­தே­சத்தில் வைத்து சந்­தேக நபர்கள் பய­ணித்த முச்­சக்­கர வண்­டியை நிறுத்தி சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போதே குறித்த கஜ முத்­துக்கள் இருப்­பது கண்டு பிடிக்­கப்­பட்டு கைப்­பற்­றப்­பட்­டன.இத­னை­ய­டுத்து முச்­சக்­கர வண்­டியில் பய­ணித்த பௌத்த பிக்கு உட்­பட ஐவ­ரையும் அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ள­துடன் சந்­தேக நபர்கள் பய­ணித்த முச்­சக்­கர வண்­டி­யையும் கைப்­பற்­றி­யுள்­ளனர். மேற்­கு­றிப்­பிட்ட விகா­ரையில் ‘தரந்­துவ’ எனப்­படும் பெட்­ட­கத்தில் மிகப் பாது­காப்­பாக வைக்­கப்­பட்­டி­ருந்த இது­வ­ரையில் விலை மதிக்க முடி­யாத கஜ­முத்­துக்­க­ளையே நீண்­ட­நாட்களின் முன் இவர்கள் திரு­டி­யுள்­ள­மையும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ளது.

இதன்­போது நாவு­ல­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பிக்கு உட்­பட இருவர் மெதி­ரி­கி­ரி­யவைச் சேர்ந்த ஒருவர் கம்­பளை மீத்­த­லாவ மற்றும் கஹா­டப்­பிட்­டிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த இரு­வ­ரு­மாக ஐந்து பேரே கைதா­கி­­யுள்­ளனர்.கைது செய்­யப்­பட்ட குறித்த சந்­தேக நபர்­களை கம்­பளைப் பொலி­ஸாரின் ஊடாக கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிரடிப்படையினர் மேலும் தெரிவித் தனர்.

கங்கண சூரிய கிரகணம் டிசம்பர் 26 இடம்பெறவுள்ளது - யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டு., வாகரை பிரதேசங்களில் பார்க்கமுடியும்

‘கங்கண சூரிய கிரகணம்’ இன்று இடம்பெறவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை, இலங்கையில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்குமென இலங்கை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதிக்குப் பின்னர், இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை நேரப்படி, காலை 8.09 முதல் 11.25 வரையான மூன்று மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் இக்கிரகணம் நிகழுகின்ற போதிலும் காலை 9.35 முதல் காலை 9.37 வரையான காலப்பகுதியே உச்ச நிலையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை (26) இடம்பெறும் இந்த கங்கண, பகுதியளவிலான சூரியக் கிரகணம் இலங்கையின் ஊடாகப் பயணிக்கும் போது பூமியின் மேல் விழும் சந்திரனின் முழுமையான நிழல் 128 கிலோ மீற்றர்கள் விட்டத்தைக் கொண்டிருக்கும்.

புவியின் சுழற்சி காரணமாக பூமியின் மேற்பரப்பின் மேல் வேகமாகப் பயணம் செய்வதோடு அதன் பயணப்பாதை இலங்கையின் வட பகுதி ஊடாக அமைந்திருக்கும். 

மன்னார் முதல் திருகோணமலை வாகரை வரை வரையப்படும் கோட்டிக்கு மேலாக யாழ்ப்பாணம் வரை உள்ளவர்களுக்கு இச்சூரிய கிரகணத்தை தெளிவாகவும் அதன் கீழான காலி, ஹம்பாந்தோட்டை வரை உள்ளவர்களுக்கு பகுதியளவிலும் பார்க்கக் கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்ணியல் விஞ்ஞான மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை காலை 8.09 மணியளவிலும் காலை 9.35 முதல் 9.37 வரையான காலப்பகுயில் கங்கண சூரிய கிரணத்தை அவதானிக்கலாம். கொழும்பு நகரில் காலை 8.10 தொடக்கம் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.

காலியில் காலை 8.11 முதல் அவதானிக்கலாம். அவ்வேளை சூரியன் சந்திரனால் 87.6 வீதம் மறைக்கப்படும். சூரிய கிரகணம் முற்பகல் 11. 22 முடிவுறும் எனவும் அவர் கூறினார்.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்கவென வட பகுதியில் மாத்திரம் சுமார் எட்டு தொலைநோக்கு காட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இச்சூரிய கிரகணத்தைப் பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் வரையும் சுமார் 1500 பேர் யாழ்ப்பாண மையத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இதனை இங்கு பார்வையிட சுமார் 5000 பேரளவில் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில் இச்சூரிய கிரகணத்தைப் பார்க்கவென சோலர் எட்டிலிக்ஸ் வீவர் என்ற கண்ணாடிகள் 2000 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என யாழப்பாண பல்கலைக்கழக பௌதிகவியல் பீட சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் கூறினார்.

இந்த கிரகணத்தைப் பார்வையிடுவதில் உள்நாட்டு வெளிநாட்டு ஆர்வலர்கள் யாழ்குடா நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவிலிருந்து ஐந்து விஞ்ஞானிகளும் வந்துள்ளதாகவும் அவர்களும் யாழ்ப்பாணம், கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து சூரிய கிரகணம் குறித்து மாணவர்களையும் பொதுமக்களையும் அறிவூட்ட உள்ளனர்.

உத்தியோகப்பூர்வ அரச இல்லங்களை இதுவரை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து அபராத தொகை அறவீடு.

உத்தியோகப்பூர்வ அரச இல்லங்களை இதுவரை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து
அபராத தொகையை பெற்றுக்கொள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களில் சிலர் தமது உத்தியோகப்பூர்வ இல்லங்களை ஒப்படைத்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும், அதிகளவானவர்கள் அதனை இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், உத்தியோகப்பூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறும் அவ்வாறு செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, இரண்டாவது நினைவூட்டல் கடிதம் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் அதிகளவானவை தற்போது அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாய்ந்தமருது அதிகம் மொட்டுக்கு ஓட்டு போடாவிட்டாலும் மொட்டு அமைச்சா; களத்தில்

பாறுக் ஷிஹான்

காட்டுயானைகளின் நடமாட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள   சாய்ந்தமருது மக்களின் நிலைமைகளை  வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் சென்று  ஆராய்ந்துள்ளார்.

புதன்கிழமை(25) மதியம் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ். வை.எம். ஹனீபா மற்றும் சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் அழைப்பின் பெயரில் அங்கு விஜயம் நிலைமைகளை  வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க பார்வையிட்டார்.

பின்னர் அவ்விடத்தில் நின்ற ஊடகங்களிடம் தெரிவித்ததாவது

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்கள் தினமும் எதிர்கொள்ளும் காட்டு யானை தொல்லை தொடர்பாக இங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.அந்த அடிப்படையில்  இங்கு நான் வந்துள்ளேன்.புதிய ஆண்டில்  யானை வேலி ஒன்றினை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.எனவே பொதுமக்களாகிய நீங்கள் எமது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சரை இடைமறித்து பொதுமக்களும் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்து  தீர்வுகளை பெற்றுத்தந்துதவுமாறு கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

என்னிடம் வருவதென்றால் எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.அப்போது தான் என்னால் உதவ முடியும்.


கல்முனை மாநகரம் மஹிந்த ராஜபக்ஸ இல்லாவிடின் இருக்காது-வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க
பாறுக் ஷிஹான்

வாக்களித்தால் தான் என்னை சந்திக்க முடியும் இல்லாவிடின் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என
வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள பெரிய முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை(25) மதியம்  கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவாக செயற்பட்ட இளைஞர் குழுவினை சந்தித்த வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

யாரும் எல்லாம் கதைக்கலாம்.நான் மனதில் உள்ளதை தான் கதைக்கின்றேன்.என்னிடம் வருவதென்றால் எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.அப்போது தான் என்னால் உதவ முடியும்.வாக்களிக்காமல் என்னை நீங்கள் தொந்தரவு செய்ய வேண்டாம்.தற்போது எனது தொலைபேசி இலக்கத்திற்கு 80 வீதமான கோல்கள் தமிழ் முஸ்லீம் மக்களிடம் இருந்து தான் வருகின்றன.எந்த சிங்கள மக்களும் எனக்கு தொலைபேசி எடுப்பதில்லை.ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எனது மனைவி மகனை தவிர எவரும் என்னிடம் உரையாடுவதில்லை.ஆனால் தற்போது எல்லோரும் குசலம் விசாரிக்கின்றனர்.

ஆதம்பாவா றஹீம் நான் பொன்னசாமி நான் முனியாண்டி என்று தினமும் தமிழ் முஸ்லீம் மக்களே தொலைபேசியில் என்னிடம் பேசுகின்றனர்.ஆனால் சிறிபாலவோஅப்புகாமியோ சுகுன் எவரும் எனக்கு கோல் எடுப்பது இல்லை.ஆனால் சந்தர்ப்பவாதிகள் போன்று என்னுடன் கதைக்க வேண்டாம் .இங்கு வீதியை பாருங்கள்.எவ்வாறு இருக்கின்றது.வேலைவாய்ப்பு இல்லை .எமது அரசாங்கம் தான் இனி அபிவிருத்திகளை செய்ய உள்ளது.யுத்தத்தை நிறைவு செய்தது யார்.கல்முனை மாநகரம் மஹிந்த ராஜபக்ஸ இல்லாவிடின் இருக்காது.ஹக்கீம் றிசாட் இங்கு என்ன செய்தார்கள் என கேட்க விரும்புகின்றேன் என கூறினார்.என கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பில் கல்முனை மாநகர உறுப்பினர் றபீக் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.

"காந்தா சவிய" (மகளிர் சக்தி) யின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு


"காந்தா சவிய" (மகளிர் சக்தி) யின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை

( மினுவாங்கொடை நிருபர் )

   கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் குடும்பங்களின் துயர் போக்கும் தூய நோக்கில் செயற்படும் "காந்தா சவிய" (மகளிர் சக்தி) அமைப்பு, இம்முறையும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் மற்றும்  பாடசாலை உபகரணங்களை வழங்கவுள்ளது.
   இந்த அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வு, எதிர்வரும் (28) சனிக்கிழமை மாலை,  கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
   கொழும்பு மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் "காந்தா சவிய" அமைப்பு, வறிய மக்கள் துயர் துடைக்கும் தூய பணியை சுமார் இருபது வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது.
   மேலும், இவ்வமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் இன, மதம் பாராது சகல இனத்தவரதும் வாழ்வுக்குக் கைகொடுத்து கரம் நீட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

அரச அதிபர்களிடம் முன்னாள் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்.


ஊடகப்பிரிவு.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மற்றும் மன்னார்  மாவட்ட மக்களுக்கு  சமைத்த உணவு மற்றும் உல ர் உணவுகளை வழங்கி வைக்குமாறும்  அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுமாறும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் இந்த அவசர வேண்டுகோளை அவர் விடுத்திருப்பதுடன்.  வெள்ளத்தின் காரணமாக அழிவுக்குள்ளானோரின் சொத்துக்களுக்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டுமெனவும்  அரசையும் வேண்டியுள்ளார்.

"பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மாத்திரமன்றி மழைநீர் காரணமாக நிரம்பிய குளங்கள் திறந்துவிடப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளமும் சேர்ந்து  மக்களை கடுமையாக பாதித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் இலவங்குளம்,6ம் கட்டை ,4ம் கட்டை  மற்றும் தில்லையடி உட்பட பெருமளவான பிரதேசங்கள் வெள்ளத்தின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ளது. மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். இதனால் இவர்களுக்கு நாங்களும் உதவிகள் செய்து வருகின்றபோதும்.தொடர்ந்தும் உதவி தேவைப்படுகின்றது.  அதுமாத்திரமன்றி விவசாய பயிர்கள், இறால்பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே உரிமையாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன்.மக்களின் குறைகளை கேட்டறிந்தார்..

පිටකොටුවේ පදික වෙළෙඳාම ෆයිසර් ගේ මැදිහත් වීමෙන් යළි ඇරඹේ
   පිටකොටුව, ශ්‍රී බෝධිරාජ මාවත අවට පදික වෙළෙඳාම් කිරීමේ අවස්ථාව යළිත් හිටපු අමාත්‍ය  කොළඹ දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී ජනාධිපති නීතිඥ  ෆයිසර් මුස්තෆා  මහතා උදාකර දී ඇත.
   ඒ, එම පදික වෙළෙදුන්ගේ ආර්ථික දුෂ්කරතා සම්බන්ධයෙන් අදාළ බලධාරීන් වෙත පැහැදිලි කර දීමෙන් පසුවයි.
   ඒ අනුව, පදිකයින්ට හිරිහැරයක් නොවන පරිදි, පදික වෙළෙදුන්ට අවස්ථාව ලබාදීමට එම බලධාරීන් තීරණය කළේ, පාර්ලිමේන්තු මන්ත්‍රී ෆයිසර් මුස්තෆාගේ ඉල්ලීමක් අනුවයි.
මෙම තීරණය සම්බන්ධයෙන් පදික වෙළෙදුන් මෙන්ම පදිකයින් ද සිය ප්‍රසාදය පළ කර තිබේ.

( මිනුවන්ගොඩ - අයි. ඒ. කාදිර් ඛාන් )

சுபரி கம" வேலைத்திட்டம் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல்
===========

(எம்.என்.எம்.அப்ராஸ்)

"சுபரி கம" சமுதாய அடிப்படையிலான கிராம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ளடக்கிய ஒவ்வொரு பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவின் கீழ் இரண்டு மில்லியன் ரூபா பெறும தியான செயற் திட்டங்களை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக
கல்முனைகுடி 13மற்றும் 14 பிரிவுக்கான
ஆலோசனை கலந்துரையாடல் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று(22) இடம்பெற்றது .

இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி யு.எம்.நிசார் , உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் ,
கல்முனை மாநகர சபை உறுப்பினர்காளான அப்துல் மனாப் ,ஏ.எம்.பைரூஸ் மற்றும்
அரசியல் விமர்சகர் எம்.எச்.எம்.இப்ராஹீம்,கலீலூர் ரஹ்மான்,
கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கம் மூலம் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது இதன்மூலம்உட்கட்டமைப்பு ,பிரதேசத்தில் காணப்படுகின்ற அத்தியாவசிய தேவைகள் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வது இத் திட்டத்தின் நோக்கமாகும் .

Sri Lanka SMEs buoyed by new government’s timely relief and surprise Christmas bonanza


Sri Lankan SME sector rejoiced the latest initiative by the new government to suspend recovery of loans obtained by them. The Confederation of Micro, Small and Medium Industries (COSMI) representing the SMEs promptly heaped its praise on the new government for its speedier action to revive domestic SMEs and SME paddy millers through its December 20 announcement.

“The directive by President Gotabaya Rajapakse and Prime Minister Mahinda Rajapaksa on December 20 addresses the need of the hour for our SMEs and is clearly a timely step in the right direction over the longer term. What is more, we warmly welcome the comprehensive package to be followed for SMEs which is expected to come anytime. We are very hopeful that this additional package will give a bigger boost to both the lender and the borrower in this sector, which is the lifeline of our economy” said Nawaz Rajabdeen, Founder President COSMI on 21 December.
On 20 December, the Government suspended recovery of loans obtained by the SME sector, not exceeding Rs 300 Mn for each entity through a directive to revive SMEs in the country.  “The recently announced tax reform initiatives provide substantial savings to all banks including the Central Bank of Sri Lanka. The Government expects the banks to use part of such savings to revive the SME sector on a priority basis. This concessionary action will be followed by a comprehensive package coupled with already announced tax concessions designed by the Ministry of Finance, economy and Policy development and the Central Bank of Sri Lanka which will support both the lender and the borrowers especially the SME sector” the Treasury said.
Financing and lack of credit are the banes of Sri Lankan SMEs -of all types. According to the 2018 Ernst and Young (EY) SME Survey commissioned by the Ministry of Industry and Commerce, ‘Access to Finance’ was the foremost issue faced by SMEs in doing business. 59% of the respondents in the Ernst and Young Survey said the SMEs were hampered by finances. None of the surveyed small enterprises were able to secure an SME loan facility, while most medium level enterprises were granted bank loans at commercial rates at high interests-“the effective interest rates charged by banks (13%-17%) and non-bank financial institutions (30%-50%) are high and burdensome for SMEs” the report said.
COSMI President Rajabdeen added: “An unseen but a welcome impact by this important announcement is that it finally opens the door for regional industry SMEs. In that it will be an ideal opportunity for regional and district chambers to come forward lock-stock and play an active role in the revival and sustainable development of industrial MSMEs, particularly Micro and Small industries which are lagging behind.” Rajabdeen said: “We have an unexpected and a surprise Christmas gift for all types of SMEs this year thanks to government’s timely decision.”
The Confederation of Micro, Small and Medium Industries (COSMI) was formed in August this year, and aims to revive and foster the MSMEs in Sri Lanka, with a focus on revival of industries of all scales

உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாதக் குழுவை, இலங்கை இராணுவம் தோற்கடித்ததை சில நாடுகள் விரும்பவில்லை - பிரதமர் மஹிந்த

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து சிறிலங்கா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்து வெளியேறும் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாதக் குழுவை சிறிலங்கா இராணுவத்தால் தோற்கடிக்க முடிந்தது.

உலகில் உள்ள படைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது.

எனினும், சிறிலங்கா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு  சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை.

ஆனால், அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும், அந்த நாடுகளில் உள்ள இராணுவம் சிறிலங்கா இராணுவத்தைக் குறித்து சாதகமான கருத்தைக் கொண்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்தை மலேசியாவில் அமுல்படுத்தினால் என்ன நிகழும் என்று உங்களுக்கே தெரியும் - மகாதீர் முகம்மத்

குடியுரிமை சட்டத்தை மலேசியாவில் அமுல்படுத்தினால் என்ன நிகழும் என்று உங்களுக்கே தெரியும்
என அந்நாட்டு பிரதமர் மகாதீர் பின் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சட்டத்தை குறித்தும், போராட்டங்களை குறித்தும் உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உரிமைக்காக அமைதியாக போராடும் மக்களுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் இந்த சட்டத்தின் அடிப்படையே பாரபட்சமாக உள்ளது என ஐ.நா சபை கருத்து தெரிவித்தது.

இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் மகாதீர் பின் முகமது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை குறித்து கருத்து தெரிவித்தார்.

‘மதச்சார்பற்ற நாடு என்று கூறும் இந்தியா, இப்போது சில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன்."

நாம் இதை இங்கே செய்தால், என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டில் மிகப்பெரிய குழப்பமும் உறுதியற்ற தன்மையும் ஏற்படும். மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவார்கள்’, என அம்மாநாட்டின் போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மகாதின் பின் முகமது தெரிவித்தார்.

மலேசிய பிரதமரின் இந்த கருத்துக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி அளித்துள்ளது. ‘மலேசிய பிரதமர் கூறிய கருத்து உண்மையிலேயே தவறானது. உண்மைகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்தியாவின் உள்துறை விவகாரங்களை பற்றி மலேசியா கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்’ என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

காணிகளை அபகரிப்பது கள்ள உறுதிகளை முடிப்பது போன்ற படங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பாறுக் ஷிஹான்

காணிகளை அபகரிப்பது கள்ள உறுதிகளை முடிப்பது போன்ற படங்களை  நிறுத்திக்கொள்ள வேண்டும்.அதனை தடுக்க எல்லா மக்களும் தமிழராக அணிதிரண்டு நிற்க வேண்டும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு  கலாச்சார மண்டபத்தில்  வெள்ளிக்கிழமை(20) மாலை   மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்


எல்லா மக்களும் தமிழராக அணிதிரண்டு நிற்க வேண்டும் அதுவே நமது இலக்கு. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர் ஜனாதிபதி பதவி ஏற்ற பின்பு கருணா அம்மான் நிச்சயம் தேர்தல் போட்டியிட வேண்டும் என்று சொன்னார் நான் சொன்னேன் உங்களுடைய கட்சியிலிருந்து நான் தேர்தலில் நிற்க மாட்டேன். ஒரு முஸ்லிமை வெற்றி பெறச் செய்ததற்காக என்னை தேர்தல் கேட்கிறீர்களா என்று கேட்டேன். நிச்சயம் போட்டியிட்டுத் தான் ஆக வேண்டும் என கூறினார். தேர்தலில் நிற்க  முடியாது என்று ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினேன்.

இதில் நடந்தது என்ன தமிழ் வேட்பாளர்களின் வாக்குகளை பெற்று ஹிஸ்புல்லாவும்  அமீர் அலியையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி விட்டனர்.அந்தப் பாராளுமன்றத் தேர்தலில் நான் வெளிப்படையாக அறிக்கை விட்டேன் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள் என்று  ஏனெனில் அந்த நேரம் நிலைமை அவ்வாறு இருந்தது.

 பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எனது வீடு தேடி வந்து அந்த தேர்தலில் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
வரலாற்றில் ஒருநாள் மறக்கக்கூடாது உடனே ஆதரவாளர்களையும் அனைவரையும் திரட்டி கூறினேன் அவரை வியாழேந்திரனை  வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அவரை வெற்றி பெறச் செய்தோம். அப்படித்தான் நாம் இருக்க வேண்டும்.

எப்போதும் நாம் தனித்துவமாக வருகின்றோம். நமக்கு அதிகாரமும் வேண்டும் உரிமையும் காப்பாற்ற  வேண்டும் அவற்றுக்கு ஏற்றார்போல காய் நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம் அதேபோல்  தான் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் .
இதில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் இதையே  உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். 

அம்பாரை மாவட்டம் தற்போது எழுர்ச்சி கண்டு வருகின்றது நான் உங்களிடம் ஒரு விடயத்தை முன் வைக்க விரும்புகின்றேன் உங்களுக்காக என் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கின்றேன். உங்கள் முன் நின்று பேசுகின்ற என்றால் என் உடம்பிலும் பல விழுப்புண்கள் இருக்கின்றன.நான் இறந்து  பல காலம் ஆகிவிட்டது விட்டேன் இனி இறப்பதற்கு  ஒன்றுமில்லை.
எங்களுடைய தமிழ் மக்கள் விடயத்தில் மோத வேண்டாம் உங்களுடைய நிலைப்பாட்டில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள் இல்லையேல் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.காணிகளை அபகரிப்பது கள்ள உறுதிகளை முடிப்பது போன்ற படங்களை  நிறுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அம்பாறை மாவட்ட  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி  ஆதரவாளர்கள்  உடனிருந்தனர்

முஸ்லிம் தலைமைகள் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் அரசியல் செய்ய முற்படக்கூடாது


- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவிப்பு

( ஐ. ஏ. காதிர் கான் )

   முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இனவாத ரீதியில் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்ய முற்பட்டால், சிறுபான்மைச் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதனை நாம் மறந்துவிடக் கூடாது என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
   அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, நாம் தான் கிங் மேக்கர்கள் என, சிறு பான்மைச் சமூகத் தலைவர்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளனர். இது வழமையானதாகவே காணப்பட்டது.    நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை பெளத்த சிங்கள மக்கள், மிகவும் ஆழமாகவே சிந்தித்தனர். இதற்கு முடிவு கட்ட ஓரணியில் திரண்டனர். சிறுபான்மைத் தரப்புக்களின் இலக்கை நோக்கிக் குறி வைத்து தவிடுபொடியாக்கி விட்டனர். ஆனால், வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் கோட்டாபய ராஜபக்ஷ்வை முற்று முழுதாகவே நிராகரித்தனர். இதனால் என்ன நடைபெற்றுள்ளது என்பதை, சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் உணர்ந்திருப்பார்கள் என்பதை, நான் இங்கு சொல்லாமலேயே புரிந்திருக்கும்.
   எனவே, முஸ்லிம் சமூகம் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். சுய நல அரசியல் தலைவர்களின் பின்னால் அணி திரளாமல் சுயமாகச் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும். அத்துடன், இந்த முஸ்லிம் தலைமைகளும் இனிமேல் சிந்திக்க வேண்டும். அவர்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் அரசியல் செய்ய முற்படக் கூடாது.
   சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இனவாத ரீதியில் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால், சிறுபான்மைச் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒற்றுமையுடன் "நாம் இலங்கையர்" என்ற ரீதியில் எமது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும். இதேவேளை, தனது சமூகத்தின் கெளரவம் பாதிக்கப்படுவதற்கு இந்த பைஸர் முஸ்தபா ஒருபோதும் துணை போகப் போவதில்லை என்பதையும் இங்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

எதுன்கஹகொட்டுவ மாணவன் முஸ்னி மும்தாஸ் கஸீதா போட்டியில் முதலிடம்( மினுவாங்கொடை நிருபர் )

     அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட  கஸீதா போட்டியில், எதுன்கஹகொட்டுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த  மாணவர் முஸ்னி மும்தாஸ் முதலாம் இடத்தைச் சுவீகரித்துக் கொண்டுள்ளார். இப்போட்டி நிகழ்வு, கண்டி சித்தி லெப்பை கல்லூரியில் (14)  நடைபெற்றது. 
   இந்நிகழ்வில், ஏற்கனவே கல்வி வலய, மாவட்ட மற்றும் மாகாண  ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் முதலாமிடம் பெற்ற ஒன்பது  மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 
    அகில இலங்கை ரீதியிலான இறுதிப் போட்டியில்,  குளியாப்பிட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட எதுன்கஹகொட்டுவ மத்திய கல்லூரி  மாணவரான எம். முஸ்னி மும்தாஸ் கஸீதாப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று, பல வருடங்களுக்குப் பின் இப்பாடசாலைக்கு தேசிய ரீதியில் பேரும் புகழும் ஈட்டிக்கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.
    மும்தாஸ் -  ஷர்மிளா தம்பதிகளின் மூத்த புதல்வரான இம்மாணவன்,  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 158 புள்ளிகளைப் பெற்று, இக்கல்லூரியில்  சித்தியடைந்த ஒரேயொரு  மாணவன் என்பதுடன், 
   தொடர்ந்தும் கல்வி, கலாசார மற்றும்  விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் பாடசாலை, மாவட்ட, மாகாண ரீதியில் வெற்றி பெற்று வரும் திறமைமிக்க மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    இதேவேளை, கஸீதாப் போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர் முஸ்னி முதலில்  இறைவனுக்கும், இப்போட்டிக்காக தனக்கு பல வழிகளிலும் பக்கபலமாக இருந்து வழிகாட்டிய பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் பாடசாலை அதிபர் உள்ளிட்ட இந்தப் போட்டியில் வெற்றி பெற மாவட்ட, மாகாண மட்டம் தொடக்கம் இன்று வரை அயராது பாடுபட்டு உழைத்த ரிஸ்லா ஆசிரியை,  மாஜித் ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.

கட்டுநாயக்க எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கடல் பொறியியல் பிரிவின் தலைவராக அப்துர் ரஹ்மான் நியமனம்( மினுவாங்கொடை நிருபர் )

   ஓகொடபொல, கஹட்டோவிட்டவில் வசிக்கும்,  உடுகொடை - திஹாரியைச்  சேர்ந்த கடல் பொறியியலாளர் (Marine Engineer) அப்துர் ரஹ்மான், கட்டுநாயக்க எந்திரவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் கடல் பொறியியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
   இவர்,  வைத்தியர் ரிகாஸா காமிலின்  கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar