இந்தியாவை முதன் முறையாக இந்தியாவில் வீழ்த்தி ,T 20 யில் வென்று பங்களாதேஷ் அணி அசத்தல்

இந்தியா - பங்களாதேஷ்  அணிகளுக்கு இடையிலான முதல் 
T20 கிரிக்கெட்  டெல்லியில் நடைபெற்றது.

Toss  வென்ற பங்களாதேஷ்  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

 
ரோகித் சர்மா 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 15 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.
பொறுப்புடன் ஆடிய ஷிகர் தவான் 4 1 ரன்னில் வெளியேறினார். 

இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கியது. அந்த அணியின் லித்தன் தாஸ், மொகமது நயீம் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

லித்தன் தாஸ் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சவுமியா சர்க்கார் நயீமுடன் அதிரடியாக ஆடினார். இருவரும் இணைந்து 46 ரன்கள் சேர்த்த நிலையில் நயீம் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம் சவுமியா சர்க்காருடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். 


பங்களாதேஷ் 18 பந்தில் 35 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில், வங்காளதேசம் அணி 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி அரை சதமடித்தார். 


இது இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டி 20 தொடரில் 1-0 என வங்காளதேசம் முன்னிலை வகிக்கிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்