Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

MCC ஒப்பந்தம் இடம்பெற்றால் முஸ்லிம்களின் நிலை பற்றி சிந்திக்க வேண்டும். - பெசில் ராஜபக்‌ஷ

அரசாங்கம் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் என்ற இவ்வொப்பந்தம் சாத்தியமாகின்றபோது எமது நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் நிலை என்னவாகப் போகின்றது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோட்டபாய ராஜபக்ஷவினை ஆதரித்து அட்டாளைச்சேனை தைக்காநகர்ப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (12) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் உள்ள எந்தவொரு மதத்தவர்களையும் நிந்திக்க நாம் இடமளிக்க மாட்டோம். எந்தவொரு இனத்தவர்களின் கலாசாரத்தினையும் பாதிக்காத வகையில் அனைத்து இனத்தவர்களையும் அரவணைத்து ஐக்கியம் மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். 

அதற்காக அனைவரும் மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து வளம் கொளிக்கும் நாடாக இந்நாட்டினை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும்.

நாம் எதிர்வரும் பதினேழாம் திகதி ஆட்சியினை அமைத்ததும் இந்நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும் உடனடியாக உலருணவுப் பொதியொன்றை மாதம் தோறும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆட்சியாளர்கள் நம்நாட்டினை மயான பூமியாக மாற்றியுள்ளனர். இந்நிலைமையினைப் போக்கி அபிவிருத்தி அடைந்த நாடாக எமது தேசத்தினை மாற்றியமைக்க எதிர்வரும் பதினாறாம் திகதி அனைவரும் ஒன்றுபட்டு மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

நாம் ஆட்சி அமைத்ததும் உரத்தினையும் விதைகளையும் இந்நாட்டு மக்களுக்காக இலவசமாக வழங்க காத்திருக்கின்றோம். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வேலை வாய்ப்பற்றுக் காணப்படும் பட்டதாரிகளுக்கும் உரிய வேலை வாய்ப்பு வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்.

சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை நாம் வழங்கவுள்ளோம் அதற்காக இந்நாட்டில் உள்ள இளைஞர்களும் யுவதிகளும் தயாராகுங்கள்.

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் தற்போது எந்த வித பயன்பாடுகளும் அற்ற முறையில் காணப்படுகின்றது. 

இப்பிராந்திய மக்கள் நன்மை பெற வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் துறைமும் கடந்த நான்கைந்து ஆண்டு காலமாக எவ்வித பயன்பாடும் அற்ற நிலையில் மூடப்பட்டு காணப்படுகின்றது.

இத்துறைமுகத்தின் மூலம் பலருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட முடியுமாக இருந்தும் இதன் மூலமான தொழில் வாய்ப்புகள் இங்கு இடம்பெறவில்லை. 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் மூலம் நாம் வெற்றி பெற்றதும் ஒலுவில் துறைமுகத்தினை மீளவும் நவீன முறையில் புனரமைத்து இப்பிராந்தியத்தில் உள்ளவர்களின் தொழில் வாய்ப்புகளுக்காகவும், மீனவர்களின் நன்மை கருதியும் பயன்பாடுகள் கொண்ட துறைமுகமாக இதனை மாற்றியமைக்க உள்ளோம்.

எதிர்வரும் பதினேழாம் திகதி வெற்றி வாகை சூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் ஜனாதிபதிப் பயணத்தின் முதலாவது மண் பிடியினை எடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா என்பதனை இவ்விடத்தில் கூறிக் கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.

2015 ஆம் ஆண்டில் நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆட்சி மாற்றத்தினை இந்நாட்டில் ஏற்படுத்தினார்கள். ஆனால் இவ் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் என்ன நடந்துள்ளது என்பது பற்றி நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன் என்றார்.

அட்டாளைச்சேனை நிருபர்

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத