தாம் இன்றி சிங்கள தலைவரை தெரிவுசெய்ய முடியாதென்ற சிறுபான்மையினர் நினைப்பு தற்போது மாறியுள்ளது

நாட்டிற்குள் எந்த அபிவிருத்தி பணிகளை செய்தாலும் தேசிய பாதுகாப்புக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என மல்வத்து பௌத்த பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் போது வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். தன்னை சந்திக்க வந்த உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் விமலதம்ம தேரர் இதனை கூறியுள்ளார்.

தாம் இன்றி சிங்கள பௌத்த தலைவரை தெரிவு செய்ய முடியாது என சிறுபான்மையினர் நினைத்தாலும் அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்யும் போது, எந்த வகையிலும் சிறுபான்மையினரை மறக்கக் கூடாது.

சிறுபான்மையினருக்கு எதிராக அல்ல, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் விமலதம்ம தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்