இன்ன‌மும் கிழ‌க்கு முஸ்லிம் ச‌மூக‌ம் விழிக்காவிட்டால் எதிர்கால‌த்தில் பாரிய‌ வீழ்ச்சியை நாம் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும். - முபாரக் அப்துல் மஜீத்

2001ம் ஆண்டு முதல் நான் சொல்லி வ‌ருகிறேன் ர‌வூப் ஹ‌க்கீம் ஒரு முட்டாள் என்றும் வேண்டும் என்றே முஸ்லிம் ச‌மூக‌த்தை ஏமாற்றுகிறார் என்றும். என் க‌ருத்தை பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டாலும் அவ‌ர்க‌ளால் ஜீர‌ணிக்க‌ முடிய‌வில்லை. இந்த‌ தேர்த‌லில் ஹ‌க்கீம் ஆத‌ரித்த‌ அணி ப‌டு தோல்விய‌டைந்த‌த‌ன் பின்னாவ‌து முஸ்லிம் ச‌மூக‌ம் சிந்திக்குமா?
முஸ்லிம் ச‌முக‌த்தை பெரும்பான்மை முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ திருப்பி விட்ட‌ நாச‌காரி ஹ‌க்கீம், த‌ன்னை ம‌ட்டும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌ம் ந‌ல்ல‌வ‌ராக‌ காட்டிக்கொள்வார்.

நாங்க‌ள்தான் ஜ‌னாதிப‌தியை தீர்மானிப்ப‌வ‌ர்க‌ள் என‌ மேடைக‌ளில் பேசி கிழ‌க்கு ம‌க்க‌ளை உசார் ப‌ண்ணி விட்டு அவ‌ரின் ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ர் தோல்வியுற்ற‌தும் இவ‌ரும் இவ‌ர் க‌ட்சியின‌ரும் ஓடிப்போய் அமைச்சு ப‌த‌விக‌ள் பெற்றுக்கொண்டு சுக‌ம் அனுப‌விப்ப‌துட‌ன் புதிய‌ ஜ‌னாதிப‌திக்கு தேர்த‌ல் முத‌ல் ஒத்துழைத்த‌வ‌ர்க‌ளை கீழே த‌ள்ளி விடுவார்.
இறைவ‌ன்தான் உள்ள‌ங்க‌ளை திருப்புப‌வ‌ன். அவ‌ன் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு தெளிவை கொடுத்தான். இந்த‌ மு. காவும் த‌மிழ் கூட்ட‌மைப்பும் த‌ம் ச‌மூக‌த்தை ஏமாற்றி ந‌ம்மையும் ஏமாற்றுகிறார்க‌ள் என்ப‌தை புரிந்து விழித்து விட்ட‌ன‌ர். இன்ன‌மும் கிழ‌க்கு முஸ்லிம் ச‌மூக‌ம் விழிக்காவிட்டால் எதிர்கால‌த்தில் பாரிய‌ வீழ்ச்சியை நாம் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும்.
ஹ‌க்கீம் கோட்டாவின் காலில் இப்போதே விழ‌த்தொட‌ங்கிவிட்டார். அவ‌ர் அமைச்சு ப‌த‌வியையும் பெற‌லாம். அவ‌ர் அமைச்ச‌ர் ஆகிட்டே என‌ கிழ‌க்கு ம‌க்க‌ள் அவ‌ர் பின்னால் சென்றால் அடுத்த‌ தேர்த‌ல் வ‌ரை கோட்டாவுட‌ன் இருந்து விட்டு தேர்த‌ல் நேர‌த்தில் த‌ன்தாய் வீடான‌ ஐ தே க‌வுக்கு ஓடுவார். முஸ்லிம் ச‌மூக‌ம்தான் த‌லை குணிந்து நிற்கும்.

ஆக‌வே முஸ்லிம் ச‌மூக‌ம் ய‌தார்த்த‌ங்க‌ளை புரிய‌ வேண்டும். உல‌மா க‌ட்சி உங்களை விழிப்ப‌டையும் ப‌டியே சொல்கிற‌து. ஹெலிக‌ப்ட‌ரையும் ப‌ஜிரோக்க‌ளையும் காணாத‌வ‌ர்க‌ள் போன்று இத்த‌கைய‌ அர‌சிய‌ல்வாதிக‌ளின் வ‌ருகையின் போது முண்டிய‌டிக்கும் ப‌த்தாம் ப‌ச‌லிக‌ளாக‌ இருக்காதீர்க‌ள். உங்க‌ளிட‌ம் நாம் ப‌ட்ட‌ம் ப‌ண‌ம், ப‌த‌விக‌ளை எதிர் பார்க்க‌வில்லை. அவை தேவையாயின் இப்போது இருக்கும் எம‌து அர‌சில் எதை கேட்டாலும் எம‌க்கு கிடைக்கும். ஆனாலும் எதையும் பெறாம‌ல் தொட‌ர்ந்தும் ச‌மூக‌த்துக்கான‌ விழிப்பூட்ட‌ல் அர‌சிய‌லையே உல‌மா க‌ட்சி செய்யும்.
உண்மை, நேர்மை ம‌ட்டுமே கொண்ட‌ உல‌மா க‌ட்சியுட‌ன் ஒற்றுமைப்ப‌டுங்க‌ள். ச‌ர‌ணாக‌திய‌ற்ற‌ கௌர‌வ‌மான‌ அர‌சிய‌ல் ச‌க்தியின் பால் உங்க‌ளை நாம் செலுத்துவோம். உள்ள‌ங்க‌ளில் தெளிவு ஏற்ப‌ட‌ வேண்டும் என‌ ஒரு க‌னம் சிந்தியுங்க‌ள். நிச்ச‌ய‌ம் இறைவ‌ன் உள்ள‌ங்க‌ளை திருப்புவான்.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
18.11. 2019

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்