Skip to main content

பிரபாகரன் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது – ஹரிஸ் எம்.பி சூளுரை


கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சமகால அரசியல் சம்மந்தமான கலந்துரையாடலும் இன்று சனிக்கிழமை (30) சாய்ந்தமருது,  மாளிகைக்காடு பிரதேசதில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபையின் மேயர் எ.எம். றகீப்,  உப மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது உரையற்றிய  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறும் போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச சக்திகளின் தலையீடு இருந்தது என்ற விடயம் எல்லோருக்கும் தெரிந்தது, அதிலும் இந்தியாவின் தலையீடு அதிகமாக இருந்ததை இந்த இடத்தில் கூறியாக வேண்டும், குறிப்பாக இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிக்கான காரணம் இலங்கையில் ஸஹ்ரான் என்ற பைத்தியம் மேற்கொண்ட  ஈஸ்டர் தாக்குதலையும், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களையே கடந்த தேர்தலில்  பிரச்சாரம் செய்திருந்தார், சஹ்ரன் குழுவினரின் அடுத்த இலக்கு தமிழ் நாடு என்றும் கருத்துக்களை முன்வைத்தனர்.

மோடி பிரதமரானதும் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்தார், குறிப்பாக பாபர் மஸ்ஜித் இடிக்கப்ப்ட வேண்டும் என்றும் அதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே போன்ற நிலை இலங்கையிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் காஸ்மீர் இன்று லடக் என்றும் ஜம்மு என்றும் பிரியப்பட்டுள்ளது இதைப்போன்றுதான் கோடீஸ்வரனும் , மாநகரசபை உறுப்பினர் ராஜன் போன்றோர் கல்முனையை கூறு போட துடிக்கின்றனர். இலங்கையின் நில அமைப்பில் கிழக்கு மாகாணத்தின் அமைப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இங்குள்ள முஸ்லிம் மக்களின் வர்தகம், கல்வி ,கலாச்சாரம் ,அரசியல் என்பவற்றின் இருப்பை கேள்விக்குறியாக்கி இல்லாமல் ஆக்குவதற்கு வல்லரசான இந்தியா முழுமையாக செயற்படுகின்றது. குறிப்பாக ஏழு,எட்டு வருடங்களுக்கு முன்னதாகவே இந்தியாவின் உளவுத்துறையினர் கிழக்கு இலங்கையில் கால்பதித்துவிட்டனர். வடக்கில் தமிழ் மக்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அவர்களை கட்டாயம் இந்தியா பாதுகாக்கும் .

அண்மையில் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் அத்துலுகிரிய ரத்ன தேரர் அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக மெர்கொண்ட உண்ணாவிரதமானது மீண்டும் ஒரு கருப்பு ஜூலை கலவரத்தை உருவாக்க முயன்றுள்ளார். இன்னும் சில மாதங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முஸ்லிம்களின் இருப்பு சம்பந்தமான விடயம் இன்னும் கேள்விக்குறியாகாவே உள்ளது. முஸ்லிம் மக்கள் இன்று  சிங்கள மக்கள் மத்தியில் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த சனாதிபதி  தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ இன்று கடனாளியாக மாறி விட்டார் .

எனினும் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெற வைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டதைப்போன்று இன்று முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க கட்டாயம் ஒன்றுபட வேடிய நிலை காணப்படுகின்றது. வடக்கில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தந்தை செல்வநாயகம் போன்றோர் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம் மக்களும் வருகின்ற பொது தேற்தலில் கட்சி பேதங்கள் மறந்து ஒன்று பட்டு தமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என தனது கருத்தில் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு பேசும் போது,

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of theLondon based Global Peace Institute (GPI)which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI Founder President Nawaz Rajabdeen’s contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” said COSMI Founder Pres…

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே
பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் !

சஜீத் − ரணில் பிரச்சினை
கூட்டனிக்கு பாதிப்பில்லை !!

நான் நிரபராதி என்பதை
சிங்கள மக்கள் உணர்வர் !!!

ஆட்சியில் இணையுமாறு அழைப்பு
வந்தால் தீர்மானிக்கலாம் !!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;

கேள்வி:
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…