Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

உண்மையில் வாக்கெண்ணும் நிலையத்தில் இடம்பெறுவது என்ன?

உண்மையில் வாக்கெண்ணும் நிலையத்தில் இடம்பெறுவது என்ன? 
இன்னும் ஓரிரு தினங்களில் இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலினை
முகம்கொள்ளவிருக்கிறோம். இம்முறை ஜனாதிபதி தேர்தலானது  வழமையான முறைமையை விட சற்று அதிகமான எதிர்பார்புடனே பார்க்கப்படுகிறது காரணம் .


35 வேட்பாளர்கள் ஆனால் ஜனாதிபதியோ பிரதமரோ போட்டியிடாத தேர்தல் 
வாக்கெடுப்பு 5 மணி வரை நீடிப்பு

வாக்குச்சீட்டு நீளம்  26 inch
ஏற்கனவே யாப்பில் கூறப்பட்ட ஆனால் முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் விருப்பு முறைமை கணக்கெடுக்கபடலாம (50% கிடைக்கபெறா விட்டால்) என்ற கணிப்பு

மேலும் பல காரணங்களை கொண்ட தேர்தலாக இது எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் 5 வகையான (மக்கள் தீர்ப்பு உட்பட )தேர்தல்கள் இதுவரையில் நடைமுறையில் உள்ளது.


இவற்றில் தேர்தலுக்கு பின்னரான வாக்கெண்ணும் முறைமையில் எமக்கு பல்வேறு முன்னுக்கு பின் முரணான செய்திகள் முற்பட்ட காலத்தில் கேள்வியுற்றிருக்கிறோம்.


வாக்குப்பெட்டிகள் மாற்றிவிட்டார்கள், வாக்குசீட்டில் உள்ள அடையாளத்தை அளித்து மாற்றியுள்ளார். தீர்ப்பினை மாற்றியுள்ளார் என பல்வேறு காரணங்களை இதற்கு முன்னரான தேர்தல்களில் பேசியிருப்போம் அல்லது கேள்வியுற்றிருப்போம்  இந்த பதிவு அதற்கான சிறிய தெளிவினை வழங்குவதே தேர்தலுக்கு பின்னரான வாக்கெண்ணும் முறைமை.இம்முறை நாடு பூராகவும்  சுமார் 1550 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் கால எல்லைகளை விட இம்முறை 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 5 மணி வரை வாக்கெடுப்பு இடெம்பெறும்.  மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு வாக்குச் சாவடியின் மூத்த தலைமை அலுவலர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் பிற அச்சிடப்பட்ட உறைகளுடன் கூடிய வாக்குப் பெட்டிஃ பெட்டிகளை சேகரித்து வாக்குச் சாவடியின் உதவித்தெரிவத்தாட்சி அதிகாரியிடம்ஒப்படைப்பார்.


அரசியல் கட்சிகள் ஃ சுயாதீன குழுக்களுக்கு அறிவிக்கப்பட்ட வாக்கெண்ணும் பணி தொடக்க நேரத்தில் வாக்கெண்ணும் பணி தொடங்கும்.. வாக்கெண்ணும் பணி  மாவட்ட செயலகங்களில் (கச்சேரி) அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச கட்டிடங்களில் எண்ணும் பணி நடத்தப்படும்.


பொதுவாக ஒரு வாக்குச் சாவடியில் சுமார் 10 வாக்குச் சாவடிகளின் (சுமார் 10000-15000 வாக்குகள் வரை) வாக்குப் பெட்டிகள் எண்ணப்படுகின்றன. இம்முறை நாடு பூராகவும் 1550 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .


ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையத்திற்கும்  பொறுப்பாக சிரேஷ்ட கணக்கெடுப்பு அதிகாரி ,  8 உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்கள், மற்றும் அவர்களின் உதவி அதிகாரிகள், மற்றும் 16 வாக்குச் சாவடியின் தலைமை அலுவலர்கள்    என சுமார் 41 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் அவர்களோடு சர்வதேச கண்காணிப்பாளர் உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பாக அவதானிக்க கட்சிக்கு தலா 5 முகவர்களை  என நியமிக்க அனுமதிக்கப்படுகின்றன.


அஞ்சல் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தலா 2 பார்வையாளர்கள் என வாக்கெண்ணும் நிலையத்தில் காணப்படுவார்கள்.

வாக்கெண்ணும் முறைமை 3 படிமுறைகளில ஃகட்டங்களில் இடம்பெறும்
கட்டம் ஒன்று
      
வாக்குச் சாவடிகளிலிருந்து பெறப்பட்ட வாக்குப் பெட்டிகள் தனித்தனியாக திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியிலும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டு மீண்டும் வாக்குப் பெட்டிகளில் இடப்படும்.


எண்ணப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெட்டியில் போடப்பட்டு  அவ்வப்போது கலக்கி விடப்படுகின்றன. பிழையாக அல்லது முறையற்ற முறையில் அளிக்கப்பட வாக்குகள் நிராகரிக்கப்பட்டு அணைத்து அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ் வாக்குப்பெட்டிகளிலிருந்து நீக்கப்படும். பின்னர் மீண்டும் அனைத்து வாக்குப் பெட்டிகளும் திறக்கப்பட்டு மீண்டும் வாக்குச் சீட்டுகள் எண்ணப்படும்.

கட்டம் இரண்டு


இரண்டாம் கட்டத்தின் 1 வது துணை கட்டத்தில் வாக்கு பெட்டிகள் உள்ள வாக்கெண்ணும் எண்ணும் அதிகாரிகள் அமர்ந்திருக்கும் மேசையில் கொண்டு வரப்படும். பின்னர்  அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு கட்சி மற்றும் குழுவின் சின்னங்களின் ஃஅடையாளங்களின்படி வாக்குச் சீட்டுகளை வேறுபடுத்தி ஒவ்வொரு கட்சி ஃ குழுவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் ஃகொள்கலனில்  வாக்குச் சீட்டுகள் போடப்படும்.


இரண்டாம் கட்டத்தின் 2 வது துணை கட்டத்தில் வாக்கெண்ணும் மேசைகளை 5 பகுதி, குழுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு கட்சிக்கும் ஃ குழுவிற்கும் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள தனித்தனியாக எடுக்கப்பட்டு அடுத்த குழு அதிகாரிகள் வரிசைப்படுத்தப்பட்ட மேசைக்கு வாக்குச் சீட்டுகளை மீண்டும் அனுப்பப்பட்டு எண்ணப்படும். பின்னர்  அடுத்த குழு அந்த வாக்குச் சீட்டுகளை 50 பகுதியாக பிரிக்கப்பட்டு பெட்டிகளில்ஃகொள்கலனில் இடப்படும்.


ஒவ்வொரு பெட்டிகளில்ஃகொள்கலனிலும் உள்ள வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை எண் மற்றும் குறியீட்டைச் சரிபார்க்கப்பட்டு மீண்டும் எண்ணப்படும். பின்னர்  ஒவ்வொரு கட்சி ஃ குழுவும் வாக்களித்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டு முடிவு பெறப்படுகிறது. அணைத்து அதிகாரிகள் கட்சி பிரதிநிதிகள் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் இடெம்பெறும் .


வாக்கெண்ணும் முகவர்கள் மறு எண்ணுவதற்கு கோரினால் இரண்டு மறு எண்ணிக்கைகள் நடாத்தப்படும். ஒவ்வொரு கட்சி ஃ குழுவால் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் கீழ் நிறுவப்பட்ட முடிவுகளை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தும் நிலையதில்  ஒப்படைக்கப்படுகிறது.

மூன்றாம் கட்டம் 

தேர்தலில் யாரும் 50%  வாக்கினை எவரும் பெறவில்லை எனின் 3ம் கட்டத்திட்கு வாக்கெண்ணும் முறை செல்லவேண்டி வரும்.


விருப்பு வாக்கெடுப்பில் 2ம் கட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற முதலிரு வேட்பாளர்கள் தவிர்த்த ஏனைய வேட்பாளர்கள்  தேர்தல் போட்டியிலிருந்து  நீக்கப்பட்டு நீக்கப்பட்ட வேட்பாளர்களின்(33 பேரின்) விருப்பு வாக்குகளில் 2ம் கட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற முதலிரு வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட விருப்பு  வாக்குகள் மட்டும் கணக்கிடப்படும்

ஒவ்வொரு கட்சி ஃ குழுவின் வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக எடுக்கப்பட்டு  2ம் விருப்பத்தேர்வுகள் இ 3ம் விருப்பத்தேர்வுகள் கணக்கிடப்பட்டு தாள் வடிவங்களில் குறிக்கப்படுகின்றன. விருப்பங்களை குறித்த பிறகு இரண்டு விபரச்சுருக்கம் தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. கிடைக்கப் பெற்ற அனைத்து வேட்பாளர்களின்(33 பேரின்)  விருப்பங்களும் கணக்கிடப்பட்டு எண்ணிக்கையிடப்படும்.


ஒவ்வொரு கட்சி ஃ குழுவால் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் மற்றைய  கட்சி ஃ குழுவால் பெறப்பட்ட விருப்புவாக்குகளின் எண்ணிக்கை இரண்டு அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் கீழ் நிறுவப்பட்ட முடிவுகளை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தும் நிலையதில்  ஒப்படைக்கப்படுகிறது.

முடிவுகளின் அறிவிப்பு


முடிவுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு அனைத்து எண்ணும் மையங்களிலிருந்தும் எண்ணும் அறிக்கைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த பிறகு முதலில் ஒவ்வொரு கட்சியும்ஃகுழுவும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. ஏற்கனவே மேலே கூறப்பட்டதுபோல் தேர்தலில் 2ம் கட்டத்தில் யாரும் 50%  வாக்கினை எவரும் பெறவில்லை எனின் மட்டுமே  3ம் கட்டத்திட்கு வாக்கெண்ணும் முறை செல்லவேண்டி வரும் அவ்வாறில்லாமல் 2ம் கட்டத்தில் எந்த வேட்பாளராவது அறுதிப்பெரும்பான்மையை பெற்றிருந்தால் ஜனாதிபத ஆணைக்குழு அறியப்படுத்தும.


எவரும் பெறவில்லை எனின  வாக்குகளின் எண்ணிக்கையின் தீர்மானிக்கப்பட்டு பின்னர் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு பட்டியல்கள் தயாரிக்கப்படும் முதன்மை வேட்பாளர்களின் வாக்குகளுடன் மற்றைய காட்சிகள் மூலம் கிடைக்கப் பெற்ற விருப்பு வாக்குகளும் சேர்க்கப்பட்டு  அதன் பின்னர் இரு வேட்பாளர்களின் கூட்டுத்தொகையில் வகுக்கப்பட்டு பெரும்பான்மை பெற்ற வேட்பாளரை ஆணைக்குழு  ஜனாதிபதியாக    அறியப்படுத்தும் .இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது வாக்கெண்ணும் முறைமையின் சுருக்கமே இதனை இன்னும் விரிவாக பார்க்கப்படவேண்டிய ஒரு விடயமாகும் அனால் குழப்பம்,தெளிவின்மையை கருத்திற்டிக்கொண்டு இதனை இவ்வாறு கூறியிருக்கிறேன். இதற்கன தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் மற்றும் Pயுகுகுசுநுடு என்பவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகும்.


உண்மையில் வாக்கெண்ணும் பணி பல்வேறு சிக்கல்களை கொண்டது 1 இலக்கம் மாறுபட்டாலும் அதனை மீண்டும் கணக்கிடவேண்டிய சூழல் வரும் மேலும் மேலே கூறப்பட்டது போன்று  அரசு அதிகாரிகள் சர்வதேச கண்காணிப்பாளர் உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பாக அவதானிக்க தலா 5 முகவர்கள்  மத்தியில் இடெம்பெறும் இப்பணி நடவடிக்கைகளுக்குள் வாக்குப்பெட்டிகள் மாற்றிவிட்டார்கள், வாக்குசீட்டில் உள்ள அடையாளத்தை அளித்து மாற்றியுள்ளார். தீர்ப்பினை மாற்றியுள்ளார் என கடந்த காலங்களில் சந்தர்ப்பம் இருந்திருந்தாலும் தற்போது அதற்கான சந்தர்ப்பம் மிக மிக அரிது.
எனவே 7வது ஜனாதிபதியை தெரியும் 8வது ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகமாகவும் நியாயமான முறையிலும் நடைபெறவும் எதிர்கால ஜனாதிபதி மக்களாட்சியை ஏட்படுத்தவும் இறைவனை பிராத்தித்து  அனைவரும் 16 ம் திகதி இடம் பெரும் தேர்தலில் உங்களின வாக்களிகும்; உரிமையை பயன்படுத்தும் படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


தொகுப்பு
K.M  றினோஸ்
PAFFREL

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத