அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு வார காலத்திற்கு மேலாக பெய்து
வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வயல்கள்,நிந்தவூர் ,அட்டப்பள்ளம் ,காரைதீவு , சம்மாந்துறை,மாவடிப்பள்ளி போன்ற பிரதேசத்தின் நெல் வயல்கள் மழை வெள்ளத்தால் ஆறுகள் போன்று காட்சியளிக்கின்றது. தொடர்ந்தேச்சியாக வெள்ள நீர் வயல்களில் தேங்கியுள்ள காரணத்தால் வேளாண்மை அழிந்து வருகின்றன.இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண்மை சேதமடைந்துள்ளன;
நிந்தவூர் காரைதீவு எல்லையில் அமைந்துள்ள முகத்துவாரத்திற்கு செல்லும் வாய்காலில் காணப்பட்ட ஆற்றுவாழைகள் காரைதீவு பிரதேச சபையால் அகற்றப்பட்டு வெள்ள நீர் கடலுக்குள் செல்ல நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது
மழையின் காரணமாக அம்பாறை மாவட்டதிலுள்ள சிறு குளங்கள் நிரம்பியுள்ளமையினாலும் அந்த குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் வயல் நிலங்களிலுள்ள வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாருக் சிஹான்
Post a Comment