முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்??!

திகன மற்றும் தெல்தெனிய ஆகிய இடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள்  திட்டமிட்டு செய்யப்பட்டதாக கருதவேண்டும்.

சிங்களவர் ஒருவர் பயணம் செய்த முச்சக்கர வண்டியும் முஸ்லிம் ஒருவர் பயணம் செய்த முச்சக்கர வண்டியும் மோதிய போது இந்த மோதல் ஏற்பட்டது.

இதன்போது இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு 10 நாட்களுக்கு பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்தநிலையில் இனவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் அல்ல. இவை ஏற்கனவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட தாக்குல்களாகும்.

ஏதோ ஒரு காரணத்துக்காக இரண்டு இனத்தவர் மத்தியில் மோதல் நிலை ஏற்படும்போது அதனை இனவாதமாக மாற்றும் செயற்பாடே இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தை பொறுத்தவரை இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறும் போது வெறுமனே அது மரண விசாரணையாளராக செயற்படமுடியாது.  அல்லது அது தொடர்பில் தகவல்களை வெளியிடுவதை மாத்திரம் செய்யமுடியாது. ஏனெனில் அதற்கு ஊடகங்கள் இருக்கின்றன.

இதனை விடுத்து இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறும் முன்னரே அவற்றை கட்டுப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

காவல்துறையினர் இருக்கின்றனர். புலனாய்வுப்பிரிவினர் இருக்கின்றனர். அவர்களுக்கு தகவல்களை தரும் ஆட்கள் இருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருந்தும்கூட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்?

நாங்கள் கூட்டங்களை நடத்துகின்றபோது அதற்கு புலனாய்வாளர்கள் வருகின்றனர். தகவல்களை திரட்டுகின்றனர்.அவர்கள் திரட்டும் தகவல்கள் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறும் பாதுகாப்பு சபைக்கூட்டங்களில் ஆராயப்படுகின்றன. கூட்டத்துக்கு எத்தனைபேர் வந்தனர்? எத்தனை பேரூந்துகள் வந்தன? அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பன போன்ற விடயங்கள் பாதுகாப்பு சபைக்கூட்டங்களில் ஆராயப்படுகின்றன.

எனினும் இந்த வன்முறைகள் தொடர்பில் இந்த பாதுகாப்பு சபைக்கு அறிக்கைகள் வருவதில்லையா? எனக் கேட்கிறேன்.

எனவே அரசாங்கம் தமது பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. இந்த வேளையில் தமக்கு எதிராக பிரச்சனைகள் வரும்போது அரசாங்கம் அதனை திசைதிருப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குறிப்பாக 1983ஆம்ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்கப்போராட்டங்கள் உக்கிரமடைந்தவேளையிலேயே இனவாத தாக்குதல்களை அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டதை இங்கு நினைவுக்கூறவேண்டும்.

எனவே பிரச்சனைகளை ஏற்படுத்தாமல், எவ்வித இனவாத தாக்குதல்கள் இடம்பெற்றாலும் அதனை தடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
- அனுர குமார 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்