முஸ்லிம்கள் அஞ்ச வேண்டாம், பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன், எனது வெற்றி உறுதி - கோத்தாபாய

எதிர்கால‌ ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வை ஆத‌ரிக்கும் இர‌ண்டாயிர‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் மிகப்பெரிய‌ மாநாடு கொழும்பு ஷ‌ங்க‌ரிலால் ஹோட்ட‌லில் இன்று ந‌டை பெற்ற‌து. இதில் கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌,  பொதுஜ‌ன‌ பெர‌முன‌வின் த‌லைவ‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌, த‌விசாள‌ர் பேராசிரிய‌ர் ஜி எல் பீரிஸ், ஐ ம‌ சு முன்ன‌ணி பொதுச்செய‌லாள‌ர் ம‌ஹிந்த‌ அம‌ர‌வீர‌, முன்னாள் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா, மேல்மாகாண‌ ஆளுந‌ர் முஸ‌ம்மில், உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்க்ஷ உரையாற்றுகையில்

தான் ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், இனவாதம், மதவாதம் என்பனவற்றிற்கு இடமில்லை என்றும், அணைவரும் ஒற்றுமையாக வாழும் ஒரு சூழல் உருவாக்கப்படும் என்றும், பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் முஸ்லிம் மக்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்ததுடன் இன்று இங்கு கூடியுள்ள முஸ்லிம்களைப் பார்க்கும் போது எனது வெற்றி உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவத்தார்.

-அல்ஜஸீராசெய்தியாளர் முர்ஷித்
Comments

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

புதிய அரசியல் கூட்டணி – சஜித் தலைவர் – சம்பிக்க பிரதித் தலைவர்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி சைரீன் இனாம் மெளலானா இந்தோனேசியாவில் தங்கப்பதக்கம் வென்று எம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.